காற்றே என் வாசல் வந்தாய்...

 

காற்று அடித்தாலும் மழை பெய்தாலும்  தவறாமல் போட்டித்தேர்வுகளில்  குறைந்தபட்சம் ஒரு கேள்வியாது கேட்கப்படும்  பகுதி இது.... Must Read !!

காற்று...

நகரும் வாயு (Air) காற்று (Wind) எனப்படுகிறது.

அழுத்த வேறுபாடே காற்று வீசுவதற்கு முக்கிய காரணமாகும்.

அதிக அழுத்த பகுதிக்கும் குறைந்த அழுத்த பகுதிக்கும் உள்ள சாய்மானம் அழுத்த வாட்டம் (Pressure Gradient) 

அழுத்த வாட்டத்தின் (Pressure Gradient) திசையே காற்று வீசும் திசையை தீர்மாணிக்கிறது. 

புவியின் தற்சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விசை (CORIOLIS FORCE) காற்றின் திசையை மாற்றுகிறது. 

கோரியாலிஸ் விசைக்கு ஏற்ப வட அரைக்கோளத்தில் வீசும் காற்று தன் வலப்பக்கமும், தென் அரைக்கோளத்தில் வீசும் காற்று தன் இடப்பக்கமும் விலகல் அடைவதற்கு பெரல் விதி (Ferrel's Law)  என்று பெயர்.

காற்றின் முக்கிய மூன்று வகைகள்...

கோள் காற்று(PLANETARY WINDS)
பருவ காற்று(PERIODICAL WINDS)
தலக் காற்று(LOCAL WINDS)

--  என  காற்று மூவகைப்படும்..

வெவ்வேறு அட்சப்பகுதியில் ஏற்படும் வெப்ப மற்றும் அழுத்தமாற்றத்தின் காரணமாக வீசும் காற்று கோள் காற்று எனப்படும். இவை ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும்.

கோள் காற்றுகள் மூன்று வகைப்படும். அவை, 

வியாபாரக்காற்று (Trade Winds)

மேல் காற்று (Westerlies)

துருவ கீழ்காற்று (Polar Easterlies)

துணை வெப்ப அதிக அழுத்தமண்டலத்தில் இருந்து டால்டிரம் நோக்கி வீசும் வியாபாரக்காற்றுகள் (Trade Winds)

Trade Winds என்ற சொல்லுக்கு 'வியாபாரக் காற்றுகள்' என்ற மொழிபெயர்ப்பு பொருத்தமானது இல்லை.  Trade என்ற ஜெர்மானிய சொல்லுக்கு Track என்பது பொருள். Track Wind என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் வழி மாறாமல் வீசும் காற்று.  எனவே, Trade Winds என்பதைத் தமிழில் 'வழிமாறாக் காற்று' என அழைப்பதே பொருத்தமானது என்ற கருத்தும் உண்டு. 

பழங்காலம் முதல் இந்தக் காற்று வணிகத்துக்கு உதவி வருவதால் இதை 'வியாபாரக் காற்று' என்று அழைப்பதில் தவறு இல்லை என்றும் சொல்வர்.

துணை வெப்ப அழுத்தமண்டலத்தில் இருந்து துணை துருவ மண்டலத்தை நோக்கி காற்றுகள் மேல் காற்றுகள்.

மேல் காற்றுகள் 40 டிகிரி அட்சம் முதல் 60 டிகிரி அட்சம் வரை அரைக் கோளங்களில் வீசுகின்றன.

மேல் காற்றுகள் வீசும் அட்சத்தின் அடிப்படையில் அவை 

கர்ஜிக்கும் நாற்பதுகள்

அதிகோப ஐம்பதுகள்

அலறும் அறுபதுகள் 

--- என மூவகைப்படும்.

துருவ கீழ்காற்றுகள் என்பவை அழுத்தம் மிக்க துருவப்பகுதியில் இருந்து அழுத்தம் குறைந்த துணை துருவப்பகுதி தோக்கி வீசுபவை ஆகும். 

பருவ காற்றுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் வீசக்கூடிய காற்றுகள் ஆகும்.

இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு பருவக்காற்றுகள் குறிப்பிடத்தக்கவை

தலக்காற்றும், சூறாவளிகளும், எதிர் சூறாவளிகளும் மாறும் காற்றுகள் எனப்படுகின்றன.

சில முக்கிய தலக் காற்றுகள்(LOCAL WINDS)

தலக் காற்றுகள்(LOCAL WINDS) என்பது ஒரு சிறிய பரப்பளவில் குறுகிய காலத்திற்குச் சில சிறப்பான குணாதிசயங்களோடு வீசுகின்ற காற்றாகும்.

ராக்கி மலைப் பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று - சினூக் (CHINOOK)

ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று-ஃபோன்(FOEHN)

எகிப்தில் வீசும் வெப்ப உவர் காற்று-காம்சின்(KHAMSIN)

சகாராவில் இருந்து மத்திய தரைகடல் பகுதி நோக்கி வீசும் வெப்ப ஈரக்காற்று- சிராக்கோ (SIRACCO)

இந்தியாவின் தார் பாலைவனப் பகுதியில் வீசும் வெப்ப காற்று - லூ (LOO)

நியூசிலாந்தில் வீசும் வெப்ப உலர் காற்று- நார்வெஸ்டர் (NORWESTER)

சகாராவில் இருந்து ஐபீரிய தீபகற்பம் நோக்கி வீசும் வெப்ப ஈரக் காற்று-சொலானா (SOLANO)

மேற்கு ஆப்ரிக்காவின் உட்பகுதியில் இருந்து வீசும் வெப்ப உலர் காற்று-ஹர்மட்டான்(HARMATTAN)

ஆல்ப்ஸ் மலைப் பகுதியிலிருந்து பிரான்ஸ் நோக்கி வீசும் கடும் குளிர் காற்று-மிஸ்ட்ரல்(MISTRAL)

ஆன்டிஸ் மலை மேற்கு பகுதி நோக்கி வீசும் குளிர் உலர்காற்று- புனாஸ் (PUNAAS)

தூந்திரப்பகுதியில் வீசம் பனிப்புயல்- பிஸ்ஸார்ட் (BIZZARD)

ஹங்கேரியில் இருந்து வீசும் குளிர் உலர் காற்று- போரா(BORA)

தெற்கு கலிபோர்னியப் பகுதியில் வீசும் கலர் காற்று- சாண்டா அனா(SANTA ANA) 

ஸ்பெயினில் வீசும் குளிர் காற்று- லெவாண்டர் (LEVANTER)

ரஷ்ய துந்திரப் பகுதியில் வீசும் குளிர் காற்று-புர்கா (PURGA)

 ஆஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்று-ப்ரிக்ஃபீல்டர் (BRICKFIELDER)

வெப்ப தலக் காற்றுகள்வீசும் இடங்கள்
ஃபிரிக் பீல்டர்ஆஸ்திரேலியா
சின்னூக்அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
ஃபான்வடக்கு இத்தாலி
சிராக்கோசகாரா பாலைவனம்
லூஇந்தியாவின் தார் பாலைவனம்

குளிர் தலக் காற்றுகள்வீசும் இடங்கள்
ஆர்மத்தான்மத்திய ஆப்பிரிக்கா
மிஸ்ட்ரல்ஆல்ப்ஸ் மலை
புர்காஇரஷ்யா
நார்ட்மெக்சிகோ வளைகுடா
ஃபாம்பெரோஅர்ஜென்டைனா
--- வேறொரு தலைப்பில் மீண்டும் சந்திப்போம்...

Post a Comment

Previous Post Next Post