உயிரின் உயிரே....

 

வன உயிரினங்கள்

  • இயற்கைச் சூழ்நிலை நிலை அல்லது காடுகளை வாழிடமாகக் கொண்டு வாழும் விலங்குகள் வன உயிரினங்கள் எனப்படுகின்றன.
  • வன உயிரினங்கள் இருபிரிவுகளை உள்ளடக்கியது. அவை முதுகெலும்புள்ளவை (மீன், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்) மற்றும் முதுகெலும்பில்லாதவை (தேனீ, பட்டாம்பூச்சி, அந்திப்பூச்சி போன்றவை).
  • இந்தியா அதிக வன உயிரினங்களையும், வன உயிரின வகைகளையும் கொண்ட நாடு.
  • உலகிலுள்ள 1.5 மில்லியன் வகையான வன விலங்கு உயிரினங்களில் இந்தியாவில் மட்டும் 81251 க்கும் மேற்பட்ட வகையான வன விலங்கினங்கள் உள்ளன
  • இந்தியாவின் வன விலங்கினப்பன்மை, 6500 முதுகெலும்பற்ற உயிரினங்கள் , 5000 மெல்லுடலிகள், 2546 வகை மீன்கள், 1228 பறவையினம், 458 பாலூட்டி வகைகள், 446 ஊர்வன வகைகள், 204 வகையான இருவாழ்விகள், 4 வகை சிறுத்தைகள் மற்றும் சுமார் 60000 பூச்சி வகைகளை உள்ளடக்கியது.

  • புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, மலைப்பாம்பு, நரி, ஓநாய், கரடி, முதலை, காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகம், வரிக்குதிரை, காட்டுநாய், குரங்கு, பாம்பு, மான் வகை, காட்டி எருமை வகை, வலிமைமிக்க யானை வகை போன்ற வனவிலங்குகளின் வாழிடமாக இந்தியா திகழ்கிறது.
  • வேட்டையாடுதல், காடழிப்பு மற்றும் இதர மனித குறுக்கீடுகளானது வன விலங்குகளின் வாழிடங்கள் அழிப்பட்டு பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
  • இவ்வன விலங்குகளைப் பாதுகாக்கவும் சூழியல் சமநிலைத்தன்மையைப் பராமரிக்கவும், இச்சூழலில் வன உயிரிகளின் பன்மைத் தன்மையைப் பாதுகாப்பது நம் நாட்டிற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.

இந்திய வனவிலங்கு வாரியம் 1952 (IBWL)

  • 1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும்.
  • வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திய அரசு 1972-இல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
  • 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உயிர் பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act, 1972 ) தேசிய அளவிலான ஒரு முயற்சியாகும். வன உயிர் சரணாலயங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு வாரியம் ஏற்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. 
  • வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் குறிப்பிடுகிறது. 
  • 1992-இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சபையின் உயிரியல் பன்மை மரபு என்ற கருத்தரங்கில் நாடுகள் தத்தமது உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்திய வனவிலங்கின் செழுமைத்தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.

உயிர்க்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள்

  • உயிர்க்கோள பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று.
  • மக்கள் இவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்திய அரசாங்கம் 18 உயிர்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் பணி இயற்கை வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல் இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப் பகுதிகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.

பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002

இச்சட்டம் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பற்றி எடுத்துரைக்கின்றது.

அழியும் தருவாயிலும், அபாய கட்டத்திலுமுள்ள உயிரினங்களையும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டதிட்டம் வழிவகை செய்கிறது

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு.
  • பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பகுதிகளை புராதான பகுதிகளாக அறிவித்தல்.
  • அச்சுறுத்தப்படும் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்
  • இச்சட்டத்தை செயல்படுத்துவதில் கிராம மக்களின் பங்கேற்பு.
  • பல்லுயிர் பெருக்கம் சார்ந்த கிராம மக்களின் பாரம்பரிய அறிவை பாதுகாத்தல்.
  • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பெறுவதை ஒழுங்குமுறைபடுத்துதல்.
  • இந்திய அரசாங்கம், இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தை நிர்ணயித்துள்ளது.

பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் உலகளாவிய சட்டங்களும்

உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க பல மாநாட்டுத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை ,

  • 1971-ம் வருடத்திய ஈரப்புலங்கள் குறித்த ராம்சர் ஒப்பந்தம்.
  • 1972-ம் வருடத்திய உலக கலாச்சாரம் மற்றும் புராதான சின்னங்கள்-ஒப்பந்தம்
  • 1973-ம் வருடத்திய உலகளாவிய அழிந்துவரும் வன உயிரினங்கள் வாணிபம் பற்றிய ஒப்பந்தம்.
  • 1979-ம் வருடத்திய ஐரோப்பிய வன உயிரினங்கள் மற்றும் இயற்கை வாழ்விடங்கள் பற்றிய ஒப்பந்தம்.
  • 1980-ம் வருடத்திய உலக பாதுகாப்பு கொள்கைகள்
  • 1992-ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம்.

இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்

இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் (மன்னார் வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நாக்ரேக், பச்மாரி, சிம்லிபால் , சுதரவனம், அகத்திய மலை, பெரிய நிக்கோபார், கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டாக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.

  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் இருந்த புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்து 1979-இல் 3015ஆக இருந்தது. இதேபோல் மற்ற பாதிக்கப்பட்ட பாரசிங்க (சதுப்பு நில மான்), காண்டாமிருகம், யானைகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
வ.எண்உயிர்க்கோள காப்பகங்கள்மாநிலம்
1அச்சனக்மர் – அமர்கண்டாக்மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்
2அகத்தியமலைகேரளா
3திப்ரு செய்கொவாஅசாம்
4திகேங் திபங்அருணாச்சல பிரதேசம்
5பெரிய நிக்கோபர்அந்தமான் நிக்கோபர் தீவுகள்
6மன்னார் வளைகுடாதமிழ்நாடு
7கட்ச்குஜராத்
8கஞ்சன்ஜங்க்சிக்கிம்
9மானாஸ்அசாம்
10நந்தாதேவிஉத்ரகாண்ட்
11நீலகிரிதமிழ்நாடு
12நாக்ரெக்மேகாலயா
13பச்மாரிமத்தியப்பிரதேசம்
14சிம்லிபால்ஒடிசா
15சுந்தரவனம்மேற்கு வங்கம்
16குளிர் பாலைவனம்இமாச்சலப் பிரதேசம்
17சேஷாசலம் குன்றுகள்ஆந்திரப்பிரதேசம்
18பன்னாமத்தியப்பிரதேசம்

FOUR BIO HOTSPOT REGIONS OF INDIA

WISH..(to remember easily)

மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats) - W
இந்தோ பர்மா (Indo Burma)- I
சுந்தரவனக் காடுகள் (Sundaland)- S
இமயமலைகள் (Himalayas)-H

மனிதர்கள் வாழ்வதற்கு செயற்கையாக வாழ்விடங்களை உருவாக் கிக்கொள்ள முடியும். ஆனால், விலங்கினங்களும் தாவர இனங்களும் வாழும் இடங்களை செயற்கையாக உருவாக்க முடியாது. 

மனிதனும், இயற்கையும் நிலைத்திருப்பதற்கு பல்லுயிர் பெருக்கம் அவசியம். 

அவ்வகை பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதனின் கடமை. அதனால், ஒவ்வோர் ஆண்டும் உயிரினங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த,மே 22-ம் தேதி  உலக பல்லுயிர் பெருக்க தினம் (World Bio Diversity Day)  கடைபிடிக்கப் படுகிறது.

உலக அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகள் வரிசையில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு தாவரங்களில் மட்டும் 55 ஆயிரம் வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது.







Post a Comment

Previous Post Next Post