சுல்தானா ரஸியா..
மிகக் குறுகிய காலமே டெல்லியில் ஆட்சி கட்டிலில் இருந்தாலும் டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் என்ற பெரும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் இல்த்துமிஷின் மகள் ரசியா.
இல்த்துமிஷ்ஷிற்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ஃபெரோஸ் ஷா என்பவரை வென்று, ஜலாலுதீன் என்னும் அபிசீனிய அடிமையோடு நட்பு பாராட்டிய ரசியா அல்துனியா என்பவரை மணந்து கொண்டார்...
அப்போது ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திய துருக்கிய உயர்குடியினரின் சதித் திட்டத்தால் கிபி 1240 ல் இவரது ஆட்சி முடிவுக்கு வந்தது..
மின்ஹாஜ் இ சிராஜ் என்ற பெர்ஷிய வரலாற்று ஆசிரியர் ரசியாவின் குறுகில கால ஆட்சித்திறனை தன் நூலில் வியந்து எழுதியுள்ளார்...
இப்படி குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும், ஆண் பிள்ளைப்போலே மிகுந்த புகழுடன் வலம் வந்த ரசியா சுல்தானாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அடிமை வம்ச மன்னர்களில் இரும்பு மனிதனாக திகழ்ந்தவர் கியாசூதீன் பால்பன்...
..தொடரும்.
💢💢💢💢💢💢சமச்சீர் கல்வி வரலாறு (HISTORY) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்.💢💢💢💢💢💢
Tags:
வரலாறு