இல்த்துமிஷ் ...இரண்டாவது டெல்லி சுல்தான்.

இல்த்துமிஷ் ...

குத்புதீன் ஐபக்கிற்கு பின் ஆட்சிக்கு வந்த சுல்தான்..

 இல்துமிஷ் குத்புதீனுக்கு அடிமையாக  இருந்து  பின்னாளில் அவருக்கு மருமகனாகி, பின்னர் கிபி 1211ல்  அவருடைய மகன் ஆராம்ஷாவை கொன்று டெல்லி ஆட்சியைக் கைப்பற்றினார்..

மத்திய ஆசியாவை சேர்ந்த இல்பாரி என்ற பழங்குடி இனத்தில் பிறந்தவர் இல்த்துமிஷ். இதுவும் அடிமை இனத்தின் ஒரு பிரிவு.

நாட்டை நிர்வாக எளிமைக்காக பல இக்தாக்களாகப் பிரித்து அவற்றை நிர்வகிக்க இக்ததார் என்ற அலுவலர்களை நியமித்தார்..

இல்துமிஸ் படைப்பிரிவில் நாற்பதின்மர் குழுக்கள் என்ற தொகுதி முறையை உருவாக்கினார். இவர்கள் சகல்கான்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

முதல் முதலில் துல்லியமான எடை அளவு கொண்ட நாணயத்தை அதாவது 175 மில்லி கிராம் என்ற எடை அளவில்  அரபி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்திய நாணயமான டங்கா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்..

ஜிடால் என்ற செம்பு நாணயமும் இவரால் வெளியிடப்பட்டது

இவரது காலத்தில் மங்கோலியர்களால் தாக்கப்பட்ட கவாரிசம் பகுதியின் மன்னர் ஜலாலுதீன் மங்பரணி என்பவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்ததன் வாயிலாக மங்கோலியப் படை தலைவர் செங்கிஸ்கான் படையெடுப்பில் இருந்து டெல்லியை பாதுகாத்துக் கொண்டார்.

இது 1221 இல் நடைபெற்ற நிகழ்வு ஆகும் ஒருவேளை செங்கிஸ்கான் டெல்லி மீது படையெடுத்து இருந்தாள் டெல்லி சின்னாபின்னமாகி இருக்கும்.. இச்சம்பவம் இல்த்துமிஷ் சிறந்த ராஜதந்திரி என நிருபித்தது.

இவர் தலைநகரை டெல்லிக்கு மாற்றிய சுல்தான் ஆவார்.

குத்புதீன் பக்தியார் ஹாஜி என்ற சூபிச துறவியின் நினைவாக குத்புதீன் ஐபக் கட்டத் தொடங்கிய குதுப்மினார்  கோபுரத்தை இல்த்துமிஷ் கட்டி முடித்தார்.

 கிபி 1236 ல் இல்த்துமிஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.  
இறக்கும்முன் ஒரு வரலாற்று சாதனையை எழுதிச் சென்றார்.. ஆம் இவரது மகளே இந்தியாவை ஆண்ட முதல் பெண்ணரசியான ரசியா சுல்தானா ஆவார்... 
அவரே அடுத்து டெல்லியின் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பெண் சுல்தான்..

-- தொடர்ந்து படிப்போம்.. 


Post a Comment

Previous Post Next Post