டெல்லி சுல்தான்களின் ஆட்சி காலம் இஸ்லாமிய இந்தியாவிற்கு அடித்தளமிட்ட காலம் .
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்பு
சுமார் நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
1192 இல் நடைபெற்ற இரண்டாம் தரைன் போரின் மூலமாக 1206 இல் இந்தியாவில் ஏற்பட்ட சுல்தான்கள் ஆட்சி 1526 வரை தொடர்ந்தது.
1526 ல் துருக்கியரான பாபரின் படையெடுப்பால் இந்தியாவில் நிறுவப்பட்ட முகலாயர் ஆட்சி 23 முகலாய மன்னர்களின் தொடரப்பட்டு 1857 இல் முடிவுக்கு வந்தது கிட்டத்தட்ட 330 ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டுள்ளனர்.
முகலாயர்கள் டெல்லி சுல்தான்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும் டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையது வம்சம், லோடி வம்சம் என ஐந்து வம்சங்கள் ஆட்சி செய்தனர்.
முகலாயர் ஆட்சியில் ஒரே வம்சத்தைச் சேர்ந்த 24 மன்னர்கள் ஆண்டனர்.
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் முகமது பின் காசிம்.
கிபி 712 சிந்து மீது படையெடுத்தார்.
பின்னர் முகமது கஜினி இந்தியாவின் மீது கிபி 1000 முதல் 1025 வரை 17 முறை படையெடுப்புகள் நிகழ்த்தினார்.
முகமது கஜினி கடைசியாக குஜராத்திலுள்ள சோமநாதர் கோவில் மீது நடத்திய படையெடுப்பு வரலாற்றில் மிக.முக்கியமானதாகும்
முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்ஷிய அறிஞர் அல்பெருனி கஜினியின் படையெடுப்புகள் குறித்து தனது வரலாற்று குறிப்புகளில் விவரித்துள்ளார்.
1191 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த முகமது கோரியை ராஜபுத்திர அரசர் ப்ரித்விராஜன் தோற்கடித்தார்.
இது முதல் தரெய்ன் போர் எனப்பட்டது.
1192 ஆம் ஆண்டு முகமது கோரி பிரித்விராஜை வென்ற முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினர். இது இரண்டாம் தரைன் போர் எனப்படும்.
இதுவே இந்தியாவில் சுல்தான்கள் ஆட்சிக்கு வழிகோலியது.
முகமது கோரி தான் வென்ற இந்திய ஆட்சியின் பகுதியின் ஆட்சிப் பொறுப்பை தன் அடிமையான குத்புதீன் ஐபக் வசம் அளித்தார்.
குத்புதீன் ஐபக் மாம்லுக் மரபை சேர்ந்தவர். அது அடிமை வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இவ்வாறாக துருக்கிய ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவர் குத்புதீன் ஐபக்.
தன் ராணுவத்தின் வலிமையை பயன்படுத்தி ஆட்சியை நிலை நிறுத்தினார்.
தன் பெயரில் நாணயங்கள் வெளியிடுவதையும் குத்பா வாசிப்பதையும் விரும்பவில்லை.
குத்புதீன் ஐபெக் அஜ்மீரில் குவாதுல் இஸ்லாம் என்ற மசூதியையும் , டெல்லியில் தாய்டின்கா ஜோன் பாரா என்ற மசூதியையும் கட்டினார்.
அடிமை மரபின் முதல் அரசனான குத்புதீன் ஐபக் டெல்லியில் குதுப்மினாரை கட்ட தொடங்கினார்.
குத்புதீன் ஐபக் ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கிய லாக்பாஷா என அழைக்கப்பட்டார்.
ஹசான் நிசாமி, ஃபக்ரேமுதிர் போன்ற அறிஞர்களை குத்புதீன் ஐபக் ஆதரித்தார்.
கிபி 1210 ஆம் ஆண்டு போலோ விளையாடும்போது குதிரையிலிருந்து தவறி விழுந்து இறந்த நிகழ்வுடன்
டெல்லி சுல்தான்களின் முதல் வம்சமான அடிமை வம்சத்தின் ஆட்சியை துவக்கி வைத்த மாவீரன் குத்புதீன் ஐபக்கின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
---நாளை தொடர்வோம்...
💢💢💢💢💢💢சமச்சீர் கல்வி வரலாறு (HISTORY) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்.💢💢💢💢💢💢
Tags:
வரலாறு
Useful sir
ReplyDeletethank you
Delete