PUDUCHERRY FACTS- II





 புதுச்சேரி பற்றி அறிவோம்- PART II

புதுச்சேரி அரசு போட்டித்தேர்வுகள் எழுதுவோர் மட்டுமன்றி புதுச்சேரிவாழ் மக்கள் அறிந்திருக்க வேண்டிய வரலாற்று தகவல்கள் அடங்கிய தொகுப்பு.. கீழே...

1.     பழங்காலத்தில் புதுச்சேரி அகத்தீஸ்வரம் மற்றும் வேதபுரி என்றழைக்கப்பட்டது (Ancient Name)

2.     புதுச்சேரி மாநிலத்தின் மொத்த கடற்கறை நீளம் 45 கி.மீ (Coastal Line)

3.     புதுச்சேரி மாநிலத்தின் முதல் தலைமைச் செயலர்- V.S.மாத்யூஸ் (1.11.1954- 8.5.1957) (Chief Secretary)

4.     புதுவையில் பிரெஞ்சியர் தம் முதல் பண்டகச்சாலையை 1673-ல் நிறுவினர் (Ist French India Factory)

5.     டச்சுக்காரர்களிடம் இருந்து ரிஸ்விக் உடன்படிக்கைமூலம் பிரெஞ்சியர் புதுவையை பெற்றனர் Ryswick Pact)

6.     பாகூர் சிவன் கோயிலில் நிருபதுங்கனின் செப்பேடு பல்லவர் ஆட்சியை குறிக்கிறது (Bahour Temple Inscription)

7.     புதுச்சேரி பகுதிகளில் சுமார் 450 கல்வெடுகள், காரைக்காலில் 185 கல்வெட்டுகள் கிடைத்தன. மாகே பகுதியில் 4 கற்பலகை கல்வெட்டுகள், ஏனத்தில் கல்வெட்டு இல்லை (Inscriptions)

8.     பல்லவ மன்னன் சிம்மவர்மன் காலத்தில் புதுவை பல்லவரின் ஆட்சிக்குகீழ் இருந்தது (Rule of Pallava)

9.     முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் (கி.பி.907 – கி.பி.955) அவனது ஆட்சிக்கு கீழ் இருந்ததாக திருவண்டார்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது(Thiruvandarkoil Temple Inscription)

10.   இராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன்(இரண்டாம் கிருஷ்னன்) காலத்தில் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

11.   புதுவை சுமார் 300 ஆண்டுகள் சோழர்களின் கீழ் இருந்துள்ளது. பிற்கால பாண்டியர் வசம் 1268-1352), விஜய நகர மன்னன் இராசனாராயண சம்புவராயர் கீழ் 1340-1370 காலத்தில் இருந்தது.

12.   1553-ல்  பரோஸ் என்னும் போர்ச்சுக்கீசியர் நூலின்மூலம் புதுவையில் முதன்முதலில் போர்ச்சுக்கீசியர் குடியேற்றங்கள்தாம் இருந்தன என்பது தெரியவருகிறது (Portuges Rule)

13.   பின் செஞ்சி மன்னர் முத்துகிருஷ்னப்பர் போர்ச்சுக்கீசியர்களை வெளியேற்றினார். டச்சுக்காரர்கள் வணிகம் தொடர்பாக வந்து சென்றனர். (Dutch)

14.   டேனிஷ்காரர்கள் சில காலம் வணிக வளாகம் அமைத்திருந்தனர். (Danish)

15.   1648-ல் பீஜப்பூர் சுல்தான் செஞ்சியை கைப்பற்றி டேனியர்களை வெளியேற்றினார் (Bijapur Sulthan)

16.   1664-ல் கால்பர்ட் தலைமையில் பிரான்சின் வணிகக்குழு அமைக்கப்பட்டது (Colbert)

17.   ழான் பெப்பேன் எனும் கப்பல் தலைவர் தலைமையில் 1670-ல் புதுவையில் வணிகத்தலம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது

18.   1673 பிப்.4 தெலாஹே எனும் கப்பல் கேப்டன் மற்றும் “பெலான்ழே தெ லெஸ்ப்பினே” என்ற காவல் தலைவரும் புதுச்சேரி வந்தனர்.

19.   1674-ல் ஜன 14 பிரான்சுவா மார்த்தேன் புதுவை வந்தார்.( Francois Matin- Governor)

20.   1693-ல் டச்சுக்காரர்கள் செஞ்சி மன்னர் ராமராஜரிடமிருந்து 25000 பகோடாகளுக்கு புதுவையை விலைக்கு வாங்கினர்.

21.   ரிஸ்விக் உடன்படிக்கைமூலம் புதுச்சேரி பிரெஞ்சியர் வசமானது. (Ryswick Pact)

22.   1706-ல் மார்த்தீன் ஒரு புதிய கோட்டையை கட்டினார். (St.Louis Port)

23.   1725 காரைக்கால், 1739 மாகே, 1731- ஏனம் பகுதிகள் (French Setlement in Puducherry Region)

24.   முகலாயர்களால் மன்சப்தார் பட்டம் பெற்ற ஆளுனர் துய்ப்ளக்ஸ் (Duplex)

25.   புதுவை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவக்கியவர் எஸ்.ஆர். சுப்ரமணியன் (Socialistic Party)

26.   புதுச்சேரி மற்றும் காரைக்காலின் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது (Bay of Bengal in East)

27.   மாகியின் மேற்கில் அரபிக்கடல் காணப்படுகிறது (Arabian Sea)

28.   புதுச்சேரி கடற்கரை நீளம் சுமார் 22 கி.மீ. (Coastal line)

29.   சங்கராபரணி ஆற்றின் வேறு பெயர்கள் வராக நதி, சுண்ணாம்பாறு, செஞ்சியாறு (Famous Rivers)

30.   புதுவையில் மேற்கு,வடமேற்கு,வட கிழக்கு பகுதிகள் சுமார் 30-45 மீ உயர்ந்து காணப்படுகிறது. இங்கு செம்மண் குன்றுகள் காணப்படுகின்றன. (Land)

31.   புதுச்சேரியின் தெற்கில் வண்டல் மண் பரவல் காணப்படுகிறது (Land)

32.   அரியாங்குப்பம் ஆற்றின் பெயர் - கிளிஞ்சல் ஆறு (River)

33.   வெள்ளைக் களிமண், செங்கல் செய்யும் களிமண், மணற்பாறை-கூழாங்கல்-மென் களிக்கல் கொண்ட பாறைகள் காணப்படுகிறது (Rocks/land)

34.   பாகூர் ஏரி மற்றும் ஊசுட்டேரி இரண்டும் பெரிய ஏரிகள் (Great Lakes- Bahour and Ossudu)

35.   வென்னீர் ஊற்றுகள் இருந்ததாக பாகூர்க்கோவில் கல்வெட்டு கூறுகிறது (Articians)

36.   காரைக்கால் பகுதியின் வடக்கு எல்லை நண்டலாறு, தென் எல்லை வெட்டாறு (Karaikal Border)

37.   காரைக்கால் தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளது

38.   காவிரி நதியின் எட்டு கிளையாறுகள் காரைக்காலில் பாய்கின்றன (Cavery and its tributories)

39.   காரைக்கால் நரிமணம் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது (Bio Gas)

40.   காரைக்கால் பகுதியில் நெல் அதிகம் பயிரிடப்படுகிறது (Rice Crop)

41.   காரைக்காலில் எண்ணெய் வளமிருந்ததை கண்டறிந்தவர்- காஸ்மேன் (Oil Field)

42.   பெரிய நிலப்பரப்பு கொம்யூன்- திருமலைராயன்பட்டினம் (T.R.Pattinam)

43.   காரைக்கால் அம்மையார் புனிதவதி, மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் (Mangani Festivel at Karaikal)

44.   மாகே மய்யழி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது (Mayyazhi River Basin)

45.   மாகே கேரளத்தின் கண்ணனூர்,தெள்ளிச்சேரி, கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ளது (Mahe Border)

46.   அரபிக்கடல் ஓரம் மய்யழி ஆறு ஓடுகிறது. (Mayyazhi River )

47.   மய்யழி மகோத்சவம் என்னும் விழா ஒவ்வொரு ஆண்டும் மாகியில் கொண்டாடப்படுகிறது (Mayyazhi Mahothsav- Festival at Mahe)

48.   மாகே நகரம், கல்லயி , நலுதரா ஆகிய 3 பகுதிகளும் இணைந்ததே மாகி (Mahe Districts)

49.   மாகே ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாகியும், சிறிய பொன்னியம் ஆற்றுக்கு தெற்கில் நலுதரா, இவற்றுக்கு இடையே கல்லயியும் உள்ளது.

50.   மாகியின் பழைய பெயர்- மய்யழி (Ancient Name of Mahe Region)

51.   மாகி பிரெஞ்சியர் வசமான ஆண்டு- 1722 (French Settlement)

52.   கோதாவரி ஆற்றின் கிளை நதியான கோரிங்கா ஆற்றுப்பகுதியில் ஏனம் அமைந்துள்ளது (Yanam Region)

53.   ஏனம் ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு அருகில் உள்ளது

54.   கௌதமி கோதாவரி ஆற்றுப்படுகையில் குவார்ட்ஸ், மைகா காணப்படுகிறது

55.   சதுப்பு நில தாவரங்கள் வளரும் ஆற்றின் கரை- அரியாங்குப்பம் ஆறு (Mangrove Forest)

56.   கிளிஞ்சலாறின் சுழிமுகப்பகுதி சதுப்பு நில தாவரம்- அலையாத்தி (Mangrove)

57.   கிளிஞ்ச்சல் நதி வங்காள விரிகுடாவுடன் கலக்கும் கழிமுகப் பகுதியில் அரிக்கமேடு அமைந்துள்ளது

58.   நீர்ப்பாசன வசதிக்காக பிரெஞ்சியர் ஏற்படுத்திய அமைப்பு- கெய்சே கொம்யூன்ஸ்

59.   தென்பெண்ணை ஆற்றிலிருந்து பாகூர் ஏரிக்கும் நீர் வரும் கால்வாய்- பங்காரு வாய்க்கால் (Bangaru Cannel)

60.   சங்கராபரணி ஆற்றின் பிறப்பிடம்- மலையனூர் (Sangaraparani River)

61.   அரசலாற்றின் கிளை ஆறு- நட்டாறு

62.   அரிக்கமேடு அமைந்துள்ள இடம்- அரியாங்குப்பம் ஆறு (Arikkanmedu)

63.   நிரவிக்கும் திருநள்ளாறுக்கும் இடையே பாயும் ஆறு- அரசலாறு (Arasarau River)

64.   கல் மரங்கள் திருவக்கரை மற்றும் காலாப்பட்டு பகுதிகளில் காணப்படுகிறது(Paleolithic period)

65.   சுத்துக்கேணியில் 12 கால்களைக்கொண்ட ஈமப்பேழை கண்டறியப்பட்டது (Dolmens)

66.   புதுச்சேரியின் தொன்மை நாகரீகம் மைசூர் நாகரீகத்தோடு தொடர்புடையது

67.   ரோமப்பேரசர் அகஸ்டஸ் தலை உருவம் பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்ததது(Rome-Agustus)

68.   கி.மு 24 முதல் கி.பி 14 வரை அகஸ்டஸ் காலம்.

69.   அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்யப்பட்ட ஆதாரம் கிடைத்தன.

70.   மொழி பெயர்ப்பாளர் ஆனந்தரங்கரின் டைரிக்குறிப்புகள் புதுவை வரலாற்றின் முக்கிய ஆவணம் (Anandarangar Diary)

71.   வக்கீல் பொன்னுத்தம்பி பிள்ளை காலணி அணிந்து செல்ல உரிமை பெற்றவர். பிரெஞ்ச் குடியுரிமை சட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர் (Adv.Ponnuthambi Pillai)

72.   1790 நவம்பர் 14 புதுவை நகரமன்ற துவக்கவிழா நடைபெற்றது (Municipal Complex)

73.   பிரெஞ்ச் இந்திய தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியர் சாந்து உடையார்

74.   1880-ல் தல சுயாட்சி முறை கொண்டுவரப்பட்டது கொம்யூன்கள் உருவாக்கம். தேர்தல் நடைமுறை

75.   பியேர்-சண்முக வேலாயுத முதலியார் கட்சி ஆதிக்க சக்தியாய் இருந்தது

76.   1922-ல் தேச சேவகன் எனும் இதழ் பழனி சின்னைய ரத்தினசாமி நாயுடுவால் துவக்கம்

77.   ழோசப் தாவீத் மற்றும் செல்லான் நாயக்கர் இணைந்து பிராங்கோ இந்துக் கட்சி துவக்கிnனர்

78.   1946- மரியதாஸ்,செபாஸ்டின், முனிசாமி இணைந்து பிரெஞ்ச்சிந்திய மாணவர் சபை துவக்கம்

79.   பாரததேவி இதழ் எஸ்.வி.சாமி. ,

80.   முதல் முதல்வர் எதுவார் குபேர் (Ist Chief Minister)

81.   முதல் மேயராக லியோன் கரே பொறுப்பேற்றார் (Ist Mayor)

82.   1954- அக்.18 கீழுர் வாக்கெடுப்பு- 178 பேர் பங்கேற்பு. ஆதரவு 170.

83.   பால சுப்ரமணியயன் தலைமை

84.   பிரெஞ்சு அதிகார மாற்ற 1954 அக்.21-ல் டெல்லியில் கையெழுத்ததானது

85.   ஏனமின் முதல் நிர்வாகி எர்ரா சத்திய நாராயண மூர்த்தி

86.   மாகேயின் முதல் நிர்வாகி டி.எம்.ஜெழுரிக்கர்

87.   காரைக்காலில் முதல் நிர்வாகி ஏ.வி.லோகநாதன்

88.   பாரதியாருடன் திருமாலாச்சாரியார் என்பவர் தஞ்சம் வந்தார். தேச பக்தன் இதழ் நடத்தியவர்

89.   திருனள்ளாறு சனீஸ்வரன் கோவில் கல்வெட்டு முதலாம் குலோத்துங்கன் காலத்துடடையது

90.   புதுவைi மாவட்ட முதல் பேராயர் பிரிகோ ஆண்டகை (Bishop)

91.   ஜூலை 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்ட்ம் புதுவையில் ராஜா பண்டிகை கொண்டாடப்படுகிறது. (King Festival)

92.   1789 பிரெஞ்ச்ச் புரட்சியில் பாஸ்டில் சிறைச்சாலை தகர்க்கப்பட்ட தினம் ஜூலை 14.

93.   ஏப்.29 1891-ல் கனக சுப்புரத்தினம் பிறந்தார். (பாரதிதாசன்).சுய மரியாதை இயக்கத்தில் இருந்தவர்

94.   ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த மாகே தலைவர் கல்லத் தாமோதரன்

95.   உப்புச் சத்தியாகிரகத்தில் காரைக்கால் கோவிந்தசாமி செட்டியார், புதுவை அன்சாரி துரைசாமி பங்கெடுத்தனர்

96.   1909- சூர்யோதயம், 1914-சுகாபிவிருத்தனி,தர்மா இதழ்கள்

97.   1961-ல் தாகூர் கலைக்கல்லூரி, 1968-ல் பாரதிதாசன் கலைக்கல்லூரி

98.   1955- பிரெஞ்சிந்திய பண்பாடு ஆய்வு நிறுவனம் துவக்கம்

99.   1962- தூரக்கிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் ஆரம்பம்

100.புதுவை அருங்காட்சியகம் 1942-ல் துவக்கப்பட்டது (Museum)


Post a Comment

Previous Post Next Post