அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - Calligrapher பிரேம் பிஹாரி நாராயண்...

 

பெருமை கொள்ளப்பட வேண்டிய தகவல்.. தெரிந்து கொள்வோம்


இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன் முதலில் முழுக்க கையெழுத்து பிரதியாக எழுதப்பட்டது.. ஆம்... நமது முழு அரசியலமைப்பை எழுத எந்த இயந்திர கருவியும் பயன்படுத்தப்படவில்லை.


டெல்லியில் வசித்து வந்த Calligrapher பிரேம் பிஹாரி நாராயண் ரெய்சாடா  (Prem Narain Raizada)என்பவர் இந்த மிகப் பெரிய புத்தகத்தை, முழு அரசியலமைப்பை, Italics என்று அழைக்கப்படும் சாய்வு எழுத்து வடிவத்தில் எழுதினார்.

 

டெல்லியில் புகழ்பெற்ற கையெழுத்து ஆராய்ச்சியாளரின் குடும்பத்தில் 1901 டிசம்பர் 16 அன்று பிறந்த பிரேம் பிஹாரி கையெழுத்து கலையில்  மிகவும் பிரபலமான ஒரு எழுத்தாளர்


பிரேம் பிஹாரி இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். பின்னர் அவரை அவரது தாத்தா ராம் பிரசாத் சக்சேனா மற்றும் மாமா சதுர் பிஹாரி நாராயண் சக்சேனா ஆகியோர் வளர்த்தனர். தாத்தா ராம் பிரசாத் பாரசீக மற்றும் ஆங்கில அறிஞராக இருந்தார். அவர் ஆங்கில அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு பாரசீக மொழியைக் கற்பிக்கும் பணியை செய்தார்.


பிரேம் பிஹாரியின் தாத்தா ராம் பிரசாத் ஒரு கையெழுத்து வல்லுனராக (Calligrapher) விளங்கியவர். சிறுவயதிலிருந்தே பிரேம் பிஹாரிக்கு அழகான கையெழுத்து வரவும், திறமை வளரவும் கையெழுத்து கலையை கற்பித்தார்.

 

டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, பிரேம் பிஹாரி தனது தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட கையெழுத்து கலையை பயிற்சி செய்யத் தொடங்கினார். படிப்படியாக அவரது பெயரும் புகழும் அழகான கையெழுத்துக்காக பரவ ஆரம்பித்தன.

 

டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் அச்சிடத் தயாரானபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பை அச்சுக்கு பதிலாக Italics (சாய்வு) எழுத்துக்களில் கைப்பட எழுத வேண்டும் என்று விரும்பினார்.

 

ஆதலால் நேரு அவர்கள் அக்காலத்தில் புகழ்பெற்று இருந்த பிரேம் பிஹாரிக்கு அழைப்பு விடுத்து, அவரிடம் இந்திய அரசியலமைப்பை Italics (சாய்வு) எழுத்துக்களில் கைப்பட எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார். மேலும், இப்பணிக்காக எவ்வளவு கட்டணம் கேட்கப் போகிறீர்கள் என  பிஹாரியிடம் நேரு கேட்டார்.

 

அதற்கு பிரேம் பிஹாரி நேருவிடம் “எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம்என் வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன்கடவுளின் கிருபையால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்என்று சொன்னார்.

பின்னர் அவர் நேருவிடம் "எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் நான் எனது பெயரை எழுதுவேன், பிரதியின் கடைசி பக்கத்தில் எனது பெயருடன் எனது தாத்தாவின் பெயரையும் எழுதுவேன், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று ஒரு கோரிக்கையை விடுத்தார். அவரது கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டார்

 

அரசியலமைப்பை எழுத பிரேம்ஜிக்கு ஒரு வீடு வழங்கப்பட்டது. அங்கு அமர்ந்து பிரேம்ஜி அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியை எழுதத் தொடங்கினார்.

 



அரசியலமைப்பை எழுதுவதற்கு முன்பு, நேருவின் உத்தரவின் பேரில் பிரேம் பிஹாரி நாராயண் சாந்திநிகேதனுக்கு வந்தார்அப்போதைய இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உடன் இணைந்து அரசியலமைப்பு பக்கங்களில் எழுத்துக்கள் இடம்பெறாத எஞ்சிய வெற்று பகுதிகளை அலங்கரிப்பது குறித்து பிரபல ஓவியர் நந்தலால் போஸ் அவர்களிடம் விவாதித்தனர்.

 



ஓவியர் நந்தலால் போஸ் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்துமொகஞ்சதரோ முத்திரைகள், ராமாயணம், மகாபாரதம், புத்தரின் வாழ்க்கை, அசோக பேரரசரால் புத்தமதம் பரப்பப்பட்ட நிகழ்வுகள், விக்ரமாதித்தின் போன்ற பழங்கால வரலாற்று நிகழ்வுகளை வெற்றுப் பக்கங்களிலும், வெற்று இடங்களிலும் (Fill-ups) ஓவியங்களாக பதிவு செய்ய முடிவு செய்தனர்.



மேலும், பேரரசர் அக்பர் மற்றும் முகலாய பேரரசுராணி லட்சுமிபாய் வாழ்க்கை, காந்திஜியின் சுதந்திர போராட்டம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரம் போன்றவைகளை பிரதிபலிக்கும் ஓவியங்களையும் இந்திய அரசியலமைப்பு எழுத்துப் பிரதியின் வெற்றுப் பக்கங்களில் வரைய முடிவு செய்தனர்.


 

இந்தியாவின் வரலாற்று அம்சங்களை, புவியியல் சிறப்புகளை சித்திரங்களாக வரைந்து இந்திய அரசியலமைப்பின் கருத்துகளோடும் சாரம்சங்களோடும் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என அவர்களின் எண்ணம் அமைந்திருந்தது.  


அரசியலமைப்பின் உள்ளடக்கம் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப அவர்கள் பல்வேறு நிகழ்வுகளை மிகவும் சிந்தனையுடன் சிரத்தையுடன் வரைந்தார்கள்.

 


இந்திய அரசியலமைப்பை எழுத பிரேம் பிஹாரி 432 பேனாக்கள் மற்றும் 303 பேனா முனைகளை (Nibs) பயன்படுத்தினார். மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள பேனா முனைகள் பிஹாரி உபயோகித்தவை ஆகும். இப்பணிக்காக இங்கிலாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து பேனா நிப்கள் கொண்டு வரப்பட்டன.

 

பிரேம் பிஹாரி முழு அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியையும் ஆறு மாதங்களில் எழுதி முடித்தார்.

 

அரசியலமைப்பை எழுத 251 பக்கங்கள் கொண்ட காகிதங்கள் பயன்படுத்தப்பட்டது. எழுதி முடிக்கப்பட்ட அரசியலமைப்பு பிரதியின் எடை 3.650 கிலோகிராம் எடை அளவில் இருந்தது. எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்து பிரதி 22 அங்குல நீளமும் 16 அங்குல அகலமும் கொண்ட புத்தகமாக உருவானது.


பின்னாளில்டெஹ்ராடூனில் உள்ள ஒரு அரசு அச்சகத்தில், இந்திய சர்வேயர் ஜெனரலின் மேற்பார்வையில்  இந்த கையெழுத்து பிரதியை மூலமாக கொண்டு  இயந்திரத்தில் ஒரு சில பிரதிகள்  புத்தகங்களாக அச்சிடப்பட்டன.


இந்திய அரசியலமைப்பை தன் கைப்பட எழுதி வரலாற்றில் கையெழுத்து கலைக்கு (Calligraphy) அர்த்தம் கற்பித்து நினைவில் நிற்கும் பிரபல இந்திய கையெழுத்து வல்லுனரான பிரேம்  பிஹாரி பிப்ரவரி 17, 1986 அன்று இறந்தார்

 


பிரேம் பிஹாரி நாராயண் அவர்களால் கைப்பட எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பின் அசல் புத்தகம் தற்போது டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில்
(மேலே உள்ள புகைப்படம்) பாதுகாக்கப்பட்டு வருகிறது

புகழ்வாய்ந்த நம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான வரலாற்றில் இத்தகைய பல்வேறு சிறப்புகள் அடங்கியுள்ளன என்பதை எண்ணி இந்தியராய் பெருமை கொள்வோம்.. 

- மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் நன்றி.. 

மேற்கண்ட பதிவை ஆங்கிலத்தில் படிக்க கீழே கிளிக் செய்யவும். 👇

Post a Comment

Previous Post Next Post