வரலாறு முக்கிய பாடக்குறிப்புகள்
வரலாற்றுக்கு முற்பட்டக் காலம் / கற்காலம்
1. வரலாற்றின் தந்தை ஹெரட்டோட்டஸ்
2.நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துகால வரிசைப்படி கூறுவது - வரலாறு
3.தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றது.
4. 2004 ஆதிச்சநல்லூரில் 160 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
5.எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் வரலாற்று ஆதாரங்கள் என அழைக்கப்படுகின்றன
6. ஆதிமனிதன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான், மக்கள் நீக்ரிடோ வகை சார்ந்தவர்கள்
7.பொதுவாக வரலாற்றினை இரண்டு காலகட்டங்ளாக பிரிக்கலாம் - வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்று காலம்
8.மனிதர்கள் குறித்த எழுத்துபூர்வமான ஆதாரங்களும் பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்று காலம் என அழைக்கலாம்
9. 450 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் கேம்பிரியன் காலம் என்பர்.
10. எழுத்து பூர்வமான ஆதாரங்கள் என்பவை இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள்.
11.கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன் உள்ள காலத்தின் பெயர் - பழைய கற்காலம்- பேலியோலித்திக்
12.கி.மு 10,000 – கி.மு. 4000 உள்ள காலம் - புதிய கற்காலம்- நியோலித்திக்
13.கி.மு. 3000 – கி.மு.1500 உள்ள காலத்தை எவ்வாறு அழைக்கலாம்?
- செம்புக்காலம்-சால்கோலித்திக்
14.கி.மு. 1500 – கி.மு. 600வரை உள்ள காலத்தை எவ்வாறு அழைக்கலாம்?
- இரும்புக் காலம்
15.கற்காலத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? - இரண்டு
16.கற்காலத்தின் வகைகள் யாவை? - பழைய கற்காலம், புதிய கற்காலம்
17.பூமியின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது?
- 40,000 ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ செப்பியன்ஸ்)
18.வேளாண் காலம் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது?
4700 ஆண்டுகளுக்கு முன்
19.கி.மு.என்பதன் விரிவாக்கம் யாது? (BC) – கிறிஸ்து பிறப்பதற்கு முன் (Before
chirist)
20.கி.பி. என்பதன் விளக்கம் யாது? (AD) – கிறிஸ்து பிறப்பதற்கு பின் (Anno
Domini)
21.CE – Common Era , BCE – Before Common Era
22. தி.மு. (திருவள்ளுவருக்கு முன்)(B.T.) – திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31
23. தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) (A.T.)
24. டால்மென்ஸ் எனப்படும் கல்லறைத் தூண்கள் கற்காலத்தில் காணப்பட்டன
25.மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம்- பிம்பேட்கா குகை.
26.இந்தியாவின் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்.
மத்திய பிரதேசத்திலுள்ள சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா,-
இராஜஸ்தானில் - லூனி ஆற்றுச்சமவெளி, பாகல்கோட் (கர்நாடகம்),கர்னூல் குகைகள்,
தமிழ்நாடு - வடமதுரை,அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
27. 1863- ராபர்ட் புருஸ்போர்ட் என்பவர் பல்லாவரம் அருகில் கற்கால கைகோடாரிகள், உளிகள், கத்திகள் போன்றவற்றை கண்டறிந்தார். அகழ்வாராய்ச்சியின் தந்தை எனப்படுகிறார்.
28.புதிய கற்கால மனிதனின் முக்கிய கண்டுபிடிப்பு-சக்கரம்
29. மனித இனத்தை நீக்ரிடோ,ஆஸ்ட்ரலாய்ட்ஸ்,மங்கோலியர்,மைய நடுக்கடல், ஆல்பைன் மற்றும் நார்டிக் என டாக்டர்.குகா ஆறு வகையாக வகைப்படுத்துகிறார்.
30.மனிதன் முதலில் பழக்கிய விலங்கு – நாய்
31.மனித நாகரீக வளர்ச்சியின் அடுத்த படிநிலை – புதிய கற்காலம்
32.புதிய கற்காலத்தின் முக்கிய மாற்றம். - உணவு உற்பத்தி
33.டைனோசரஸ் முட்டை தமிழ்நாட்டில் எந்த ஊரில் கிடைத்தது?
- அரியலூர்.
34.ஆதி மனிதன் சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை கண்டுபிடித்தான்.
35.புதிய கற்காலத்தில் மனிதன் முதலில் பயன்படுத்திய உலோகம் - செம்பு
36.புதிய கற்காலத்தில் மனிதன் செய்த தொழில் - பயிர்த்தொழில்
37.தமிழகத்தில் புதிய கற்கால மண்பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள்.
- திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
38.புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள். – திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்
39.எந்த கால முடிவில் மனிதன் செம்பு உலோகத்தின் பயனை பற்றி அறிந்து கொண்டான்?
- புதிய கற்காலம்
40.ஹரப்பா நகர நாகரீகம் எக்காலத்தைச் சேர்ந்தது? - செம்புக் கற்காலம்
41.செம்பு கற்காலத்தின் மற்றொரு பெயர் யாது? - செம்புக் கற்கருவிகள் காலம்
42.இரும்பினால் கருவிகள் செய்த காலத்தை எவ்வாறு அழைக்கலாம். இரும்புக் காலம், திருநெல்வேலி அருகில் ஆதிச்ச நல்லூர், கேரளா தலச்சேரி உள்ளிட்ட இடங்களில் சான்றுகள்.
43.வேத கால நாகரீகம் எக்காலத்தைச் சார்ந்தது? -இரும்பு காலம்
44.தமிழகத்தில் கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள்-பல்லாவரம்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவள்ளூர்
45. செம்பு கற்கால மக்கள் தங்கள்,வெள்ளி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தினர்
46.பழைய கற்கால மக்கள். - இலை மரப்பட்டை விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்தனர்
47. இறந்தவர்களை அடக்கம் செய்ய தாழி பயன்படுத்தினர்.
48. களிமண் மற்றும் கற்களால் ஆன குடிசைகளில் வாழ்ந்தான்
49. செம்புக்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களின்மீது வண்ண ஓவியங்கள் வரைந்தனர்
50. வரலாற்றுக்கு முந்தைய காலம் மெகாலித்திக் காலம் கி.மு.1000-ல் தொடங்குகிறது
💢💢💢💢💢💢சமச்சீர் கல்வி வரலாறு (HISTORY) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்.💢💢💢💢💢💢






