வேதகாலம்
1.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினர்.
2.சப்த சிந்து எனப்படுவது ஏழு நதிகள் பாயும் நிலம் ஆகும்.
3. ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள்
குடியேறியவர்கள் என்ற கருத்தை கூறியவர் மாக்ஸ்முல்லர். அவர்கள் மத்திய தரைக்கடல் சார்ந்த
மக்கள் என வரலாற்று ஆசிரியர் குகா கூறுகிறார்.
4.இந்தியாவில் ஆரியர்கள் முதன் முதலில் குடியேறிய பகுதி – சப்த சிந்து
(சீலம்,சீனாப்,ராவி,பியாஸ்,சட்லெஜ்,சிந்து,சரஸ்வதி ஆகிய ஏழு நதிகள் சப்த சிந்து எனப்படும்)
5. ஆரியர்கள் திபெத் பகுதியினரென தயானந்த சரஸ்வதியும், ஆரியர்கள் ஆர்டிக் பிரதேச பூர்விக
குடிகள் என பாலகங்காதர திலகரும் கருத்துக்கள் வெளியிட்டனர்.
6. வரலாற்றில் இக்காலக்கட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது. வேதகாலம்
7. ஆரியர்கள் தங்கள் இனப்பெரியோர் பாடிய வேண்டுதல்களை வேதங்களாக தொகுத்தனர்.
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கும் வேதங்களாகும்
ரிக் வேதம்
– கடவுளை பற்றிபாடும் பாடல்களை உள்ளடக்கியது.
சாம வேதம்
– இசையைப் பற்றிய வேதம்
யஜூர் வேதம்
– யாகங்கள் பற்றிய வேதம்
அதர்வண வேதம் (கருப்பு வேதம்) – பஞ்சபூதங்களை கட்டுபடுத்தும் மந்திரங்கள், மருத்துவ முறைகள்
8. வித் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அறிவு அல்லது அறிதல் என்று பொருள் – வேதம் என்ற
சொல் வித் என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது.
வேதகாலம் இரண்டு வகைப்படும்,
1.முன் வேதகாலம், 2.பின் வேதகாலம்
9.முன் வேதகாலத்தின் மற்றொரு பெயர். – ரிக்வேதகாலம்
10.ரிக்வேதகால காலம். – கி.மு.1500 முதல் கி.மு.1000
11.வேதகாலத்தில் பண்டைமாற்று முறையும்வழக்கத்தில் இருந்தது.
12.வேதகாலத்தில், ஒருவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, அவரது செல்வநிலை
மதிப்பிடப்பட்டது
13.வேதகாலத்தில் சாதி அமைப்பு முறை, வருண தர்மம் என்று அழைக்கப்பட்டது.
14.வேதகாலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
15.பயிர்தொழிலும், வாணிகமும் செய்வோர் வைசியர்கள் எனப்பட்டனர்.
16.யாகம் மற்றும் புரோகிதம் செய்வோர் பிராமணர்கள் எனப்பட்டனர்.
17.ஆரியர்கள் புவியை அறியாதவர்கள்.
18. ஆரியர் நாகரீகம் ஒரு கிராம நாகரீகம்
19.ஆரியர்களின் தொழில். – கால்நடை மேய்த்தல், இயற்கையை வணங்கினர்.
20.இந்தியாவில் ஆரியர்கள் கங்கை சமவெளியில் குடியேறிய பகுதி. – ஆரிய வர்த்தம்
21.சமுதாயத்தின் அடிப்படை அலகு – குடும்பம் ஆகும்
22.பல குடும்பங்கள் இணைந்தது. – கிராமம் ஆகும்.
23.கிராமத்தின் தலைவர். – கிராமணி என்றழைக்கப்பட்டார்.
24.பல கிராமங்கள் இணைந்தது. – விசு (விஸ்) என்ற மிகப்பெரிய குழுவானது
25.விசுவின் தலைவர். – விசுவபதி என்றும் அழைக்கப்பட்டார்.
26.பெரிய ஆட்சி அமைப்பு. – ஜனா என அழைக்கப்பட்டது.
27.பெரிய ஆட்சி அமைப்பின் தலைவன். – ராஜன் அல்லது அரசன்
28.வீரமும் வலிமையும் மிக்கவர். – ராஜன்
29.ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? – பிரஜைகள்
30.அரசர்கள் எவ்வாறு அழைத்தனர். – பிரஜாபதி என்று அழைக்கப்பட்டார்கள்
31.சபா என்பது – முதியோர் அவை
32.சமிதி என்பது – ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
33.ராஜாவிற்கு நிருவாகத்தில் உதவி செய்த அதிகாரி – புரோகிதர் சேனானி (படைத்தலைவர்)
34. முன்வேதகாலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர்கள். – விஸ்வவாரா அபலா, கோசா, லோபமுத்ரா
35.வேதகால மக்களின் முக்கிய தொழில். – கால்நடை வளர்ப்பு,வேளாண்மை
36.ரிக் வேதகால புழக்கத்தில் இருந்த நாணயங்கள் – நிஷ்கா, சுவர்ணா, சதமானா
37.பிராமண காலத்தில் குருகுலத்தில் கல்வி கற்றனர்
38. பின் வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள். – கார்கி மற்றும் மைத்ரேயி
39.அரச குமாரர்களுக்குக் கற்பிக்கப்பட்ட கலை – தனுர் வேதம்
40. சோமா,சுரா ஆகிய பானங்கள் அருந்தப்பட்டன.
சோமா என ஒரு கடவுள் வழிபடப்பட்டார்.
41. வைகறை தெய்வம்-உஷா, பூமிக்கடவுள்-பிருத்வி,வாயுக்கடவுள்-மாருதி,வலிமை-இந்திரன்
42. நிவி என்ற உள்ளாடை, வாசஸ்-உள்ளாடை,
அதிவாசஸ்-மேலாடை ஆகியவை பயன்படுத்தப்பட்டன
43.முன்வேதகாலத்தில் குழந்தைமணம்
இல்லை, விதவை மறுமணம் உண்டு. பெண்கள் சிறந்த நிலை.
44. பின் வேதகாலத்தில் மக்கள் கடவுளாக
வழிபடப்பட்டனர். (மன்னர்கள், வடக்கு—வைராஜ்யா, தெற்கு-பாஸ்யா, கிழக்கு-காமராஜ்யா, மேற்கு-ஸ்வரராஜ்
என அழைக்கப்பட்டனர்)
45. ஏக்ராட், சாம்ராட் போன்ற பட்டங்கள்.
அஸ்வமேதயாகம்,ராஜசுயம்,வாஜ்பேயம் யாகங்கள் நடைபெற்றன
46. பின்வேத காலத்தில் பெண்களின்நிலை
தாழ்ந்தது.சாதிமுறை பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்டது
47.நிஷ்கா நாணயம் பயண்படுத்தப்பட்டது.
8 வகையான திருமணம் நடப்பில் இருந்தது
48. அனுலோமா, பிரதிலோமா, நியோகா
என திருமண நிகழ்வுகள் அமைந்திருந்தன
49. பண்டமாற்று முறை காணப்பட்டது.
முன் வேத காலத்தில் தொழிலின் அடிப்படையில் சாதி பிரிவுகள்.
51.வேதங்களை தொகுத்தவர்- வேதவியாசர்
52. ரிக்வேதம் பழமையானது,காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை 1028,மண்டலங்கள்-10,தொகுப்பு-பைலா.
53. பத்தாவது மண்டலம் புருஷசுக்த
மண்டலம்- சமூக பொருளாதார நிலைகள்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
54. ஒன்று மற்றும் பத்தாவது மண்டலங்கள்
பிற்காலத்தில் இணைக்கப்பட்டவை.
55. ரிக் வேதத்தில் காயத்ரி மற்றும்
ஓம் மந்திரம், உஷா தெய்வம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன
56. யஜூர் வேதம் சுக்ல (வெள்ளை)
யஜூர், கிருஷ்ண(கருப்பு) யஜூர் என இரு வகைப்படும்.-40 பாசுரங்கள்
57. கருப்பு யஜூர் சமஸ்கிருதத்தின்
முதல் உரைநடை.
58. வெள்ளை யஜூர் பாடல்கள் தொகுப்பு
59. யஜூர் வேதம் சடங்குகள், யாகங்கள்
குறித்து விவரிக்கிறது.இதை பாடுபவர்கள் அத்வார்யூ எனப்படுவர்.
60. சாம வேதம்- இசைத்தொகுப்பு-1810
பாடல்கள் உள்ளன. பாடுபவர் உத்திகாத்ரி என்றழைக்கப்படுவார்.
61. அதர்வண வேதம்-741 செய்யுள்-
சடங்கு(பில்லி,சூனியம்) முறைகள் குறித்தது.இது பிரம்ம வேதம் எனப்படும்.
62. அதர்வண வேதத்தில் கோத்ரா என்னும்
சொல் இடம்பெற்றுள்ளது. ஸ்கம்மா(பூமி), காமா(ஆசை), காலா(நேரம்),பிராணா(சுவாசம்) உள்ளிட்டவை
குறித்து விளக்குகிறது.
63. துணைவேதங்கள் நான்கு, அவை,
ஆயுர்வேதம்-மருத்துவம்,தனூர் வேதம்-சண்டை,
காந்தாரம்-இசை,நடனம்,சில்பம்-கட்டிடக்கலை
64. ஆரண்யங்கள் என்பவை வனத்தில்
முனிவர்கள் மேற்கொள்ளும் தவம்/யாகமுறை குறித்தது.
65. உபநிஷத்துகள் –அருகில் அமர்ந்து
கேட்டல் என்பது பொருள்-வேத சாரங்கள்.
66. அய்த்ரேய பிராமணம் மற்றும்
கௌசிக பிராமணம் ரிக்வேத பிராமணங்கள்
67.சம்ஹிதா-வேத அகராதி, ஸ்ருதி-செவிவழிச்
செய்திகள், ஸ்மிருதி-சிந்தனை தொகுப்புகள்
68. சூலுவ சூத்திரம் என்பது யாகபானைகள்
உருவாக்கம் தொடர்பானது.
69. வேதாங்கா ஆறு வகைப்படும், அவை
1. சிட்சை(ஒலியியல்),
2.கல்பம்(சமய நடை), 3.வியாக்ரணம்(இலக்கணம்),
4.நிருக்தம்(சொல்லாக்க விளக்கம்),
5.சோதிடம் (வானவியல்),
6.சந்தம் (சீர்)
70. மகாபாரதத்தை எழுதியவர்- வேதவியாசர்,
இராமாயணத்தை எழுதியவர்- வால்மீகி
💢💢💢💢💢💢சமச்சீர் கல்வி வரலாறு (HISTORY) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்.💢💢💢💢💢💢
