போட்டித்தேர்வுகளில் அன்றாட வேதியியல் சார்ந்த வினாக்கள் அதிகளவில் இடம்பெறும். வேதியியல் பகுதியை பொது அறிவு அடிப்படையில் படித்து எளிதாக மதிப்பெண்கள் பெற வேதியியல்-பொது அறிவும்- போட்டித் தேர்வும்... என்ற தலைப்பில் தொடர்ந்து இடம்பெறும்.. தவறாமல் படியுங்கள்..
உலோகங்கள்
♣ பளபளப்புடன், வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்ட தனிமங்கள் உலோகங்கள் எனப்படும்.
♣ மின் கடத்தும் திறன் இல்லாத ஒரே உலகம்- பிஸ்மத்
♣ உலோகங்கள் பொதுவாக கடினமான பண்பினை கொண்டவை
♣ மென்மையான உலோகங்கள்- சோடியம்,பொட்டாசியம்
♣ Noble Metals என்பது வினைபடுதிறன் இல்லாதவை- தங்கம் , பிளாட்டினம் போன்றவை.
தனிம வரிசை அட்டவணையில் உலோகங்கள் இடது பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
♣ உலோகங்களின் அரசன் - இரும்பு
♣ நீர்ம நிலையில் உள்ள உலோகம்- பாதரசம்
♣ தகடாக மாறும் தன்மை அதிகம் உடையது- தங்கம்
♣ மின்சாரக் கம்பிகளில் அதிகம் பயன்படுவது- தாமிரம்
♣ மின் கடத்துத் திறன் அதிகம் உடையது- வெள்ளி
♣ பூமியின் அதிகம் காணப்படும் உலோகம்- அலுமினியம்
♣ மின்சார பல்புகளில் பயன்படுவது- டங்ஸ்டன்
♣ செல்லில் வெளி திரவத்தில் காணப்படும் உலோகம்- சோடியம்
♣ ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்- இரும்பு
♣ பச்சையத்தில் காணப்படும் உலோகம்- மக்னீசியம்
♣ இதயம் சுருங்க தேவையான உலோக காரணி- கால்சியம்
♣ இதயம் விரிவடைய தேவையான உலோக காரணி- பொட்டாசியம்
♣ மண்ணெண்ணெய்க்குள் வைத்து பாதுகாக்கப்படுவது- சோடியம்
♣ மிகவும் இலேசான உலோகம்- லித்தியம்
♣ மிகவும் கனமான உலோகம்- ஆஸ்மியம்
♣ X கதிர்கள் ஊடுருவாத உலோகம்- காரியம்
♣ அணுக்கரு உலைகளில் கட்டுப்பாட்டுக் கழியாக (Controlling Rod) பயன்படுவது- காட்மியம்
♣ KDM 916 தங்க நகைகளில் தங்கத்தை பற்றவைக்க காட்மியம் பயன்படுகிறது
♣ வனஸ்பதி(டால்டா) தயாரிப்பில் வினைவேக மாற்றி(Catalyst) - நிக்கல்
♣ பேட்டரிகளில் பயன்படுவது- காரீயம்
♣ அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது- சீசியம்
தங்கம், வெள்ளி, தாமிரம்- நாணய உலோகங்கள் எனப்படும்
♣ புற்று நோய் சிகிச்சைக்கு - கோபால்ட்
♣ அணுசக்தி உலையில் எய்ரிபொருள்- யுரேனியம்,புளூட்டோனியம்
♣ மிக அதிகமான கார்பன் மாசு கொண்டது- வார்ப்பு இரும்பு(Cast Iron)
♣ மிகவும் தூய்மையான இரும்பு - தேனிரும்பு (Wrought Iron)
♣ உலோகம் மற்றும் அலோகம் ஆகிய பண்புகளை கொண்டவை- உலோகப்போலி(Metalloids)
♣ டெலூரியம், ஆண்டிமணி ஆகியவை உலோகப்போலிகள்
உலோகக் கலவைகள்
♠ தாமிரம் துத்தநாகம் இவற்றின் கலவை - பித்தளை
♠ தாமிரம் வெள்ளீயம் இவற்றின் கலவை - வெண்கலம்
♠ இரும்பு,குரோமியம், நிக்கல் இவற்றின் கலவை - துருப்பிடிக்காத எஃகு
♠ துத்தநாகம், தாமிரம், நிக்கல் இவற்றின் கலவை - ஜெர்மன் சில்வர்
♠ தங்கம், வெள்ளி இவற்றின் கலவை - எலக்ட்ரம்
♠ நிக்கல், குரோமியம் இவற்றின் கலவை - நிக்ரோம்
♠ அலுமினியம், மெக்னீசியம் இவற்றின் கலவை - டியூராலுமின்
♠ அலுமினியம், மெக்னீசியம், மாங்கனீஸ் இவற்றின் கலவை - மக்னோலியம்
♠ பாதரச உலோகக் கலவை- அமால்கம்(Amalgam)
♠ காரீயம், வெள்ளீயம், ஆண்ட்டிமணி இவற்றின் கலவை - டைப் உலோகம்
♠ தங்கம், நிக்கல்,பெல்லோடியம் இவற்றின் கலவை - வெள்ளைத் தங்கம்
♠ தங்கம், அலுமினியம் இவற்றின் கலவை - பர்பிள் தங்கம்
♣ அதிக மின்தடை கொண்டது- நிக்ரோம்
♣ டைப் ரைட்டர் செய்ய பயன்படுவது- டைப் உலோகம்
♣ விமான பாகங்கள் செய்ய பயன்படுவது- டியூராலுமின்
♣ வெப்பத்தான் விரிவடையாத உலோகக் கலவை- இன்வார்
♣ ஜெர்மன் சில்வர் கலவையில் வெள்ளி இல்லை
♣ பல் சொத்தையை அடைக்க வெள்ளி ரசக்கலவை
♣ ஹெல்மெட் செய்ய பயன்படுவது- மாங்கனீஸ் எஃகு
♣ எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ்களில் பயன்படுவது- நிக்ரோம்
உலோகத் தாதுக்கள்
சல்பைடு தாதுக்கள்:-
♠ வெள்ளி - அர்ஜென்டைட் (Ag2S)
♠ துத்தநாகம் - துத்தநாகம் பிளண்ட் (Zn2S)
♠ இரும்பு - இரும்பு பைரைட் (FeS2)
♠ பாதரசம் - சின்னபார் (HgS)
♠ காரீயம் - கலீனா (PbS)
♠ கால்சியம் - ஜிப்சம் (CaSo4.2H2O)
♠ மெக்னீசியம் - எப்சம் (MgSo4.7H2O)
♠ தாமிரம் - தாமிரபைரைட் (CuFeS2)
ஆக்ஸைடு தாதுக்கள்:-
♣ இரும்பு - ஹேமடைட் (Fe2O3) மேக்னடைட் (Fe2O4)
♣ அலுமினியம் - பாக்ஸைட் (Al2O3.2H2O)
♣ டைட்டானியம் - ருடைல் (TiO2)
♣துத்தநாகம் - ஜிங்கைட் (ZnO)
♣ தாமிரம் - குப்ரைட் (Cu2O)
ஹேலைடு தாதுக்கள்:-
◾ மெக்னீசியம் - கமலைட் (KCl.MgCl2.6H2O)
◾ வெள்ளி - ஹார்ன்சில்வர் (AgCl)
◾ சோடியம் - பாறை உப்பு (NaCl)
◾ அலுமினியம் - கிரீயோலைட் (Na3AlF6)
◾கால்சியம் - ஃபளூர்ஸ்பார் (CaF2)
கார்பனேட் தாதுக்கள்:-
⚫ கால்சியம் - லைம்ஸ்டோன் (CaCo3)
⚫ துத்தநாகம் - காலமைன் (ZnCo3)
⚫ இரும்பு - ஸிடரைட் (FeCo3)
⚫ தாமிரம் - மாலகைட் (CuCo3.Cu(OH)2)
⚫ மெக்னீசியம் - மேக்னசைட் (MgCo3)
--தொடரும்..
Tags:
வேதியியல்






