இதயமே...இதயமே!

 


ஒவ்வொரு போட்டித்தேர்விலும் இரண்டு மதிப்பெண்களை பெற்றுத் தருவது இதயம்..

மனித உடற்செயலியல்கீழ் இதயம் குறித்த பொது அறிவுத் தகவல்களை படித்து வைப்போம்.. 

இதயம்

மனித உடலில் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்துவது இதயம்.

இதயத்துடிப்பு குழந்தை தாயின் கருவிலிருக்கும் 7 வது வாரத்தில் தொடங்கும். 

இதயத்தைச் சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

இதயத்தின் மேல் அறைகளின் பெயர்: ஆரிக்கிள்.

இதயத்தின் கீழ் அறைகளின் பெயர் வெண்டிரிக்கள். 

இதயத்தில் வலது அறைகளில் அசுத்த ரத்தம் உள்ளது.

இதயத்தில் இடது அறைகளில் சுத்த ரத்தம் உள்ளது. 

மேற்பெருஞ்சிரை (Superior Vena Cava), கீழ்ப்பெருஞ்சிரை (Interior ena Cava) இரண்டும்வலது ஆரிக்கிளுக்கு அசுத்த ரத்தத்தைக் கொண்டு வருகின்றன. 

இதயத்திலிருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள் தமனிகள்,

மற்ற பாகங்களிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து வருபவை சிரைகள்,

நுரையீரல் தமனியைத் தவிர, மற்ற தமனிகள் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் 

தமனிகளில் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதால் அவற்றினை பிடித்து இதயத்துடிப்பை உணரலாம்.

நாடித்துடிப்பு ஆரத்தமனியில் பார்க்கப்படுகிறது.

சிரைகளில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் அதில் இருந்து பரிசோதனைக்கு ரத்தம் எடுப்பார்கள்.

சிரை வழியாகவே குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்து மருந்துகள் ஏற்றப்படுகின்றன.

நரம்பு ஊசி என்று பொதுமக்களால் குறிப்பிடப்படும் ஊசிகள் பொதுவாக சிரைகள் வழியாகவே செலுத்தப்படுபவையாகும்.

நுரையீரல் சிரையைத் தவிர, மற்ற சிரைகள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும். 

நுரையீரல் தமனி வலது வெண்டிரிகிளிலிருந்து அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

சுத்த ரத்தம் நுரையீரல் சிரை வழியே இடது ஆரிக்கிளுக்கு வருகிறது.

ஈரிதழ் வால்வு திறக்கும்போது, ரத்தம் இடது ஆரிக்கிளில் இருந்து இடது வெண்டிரிக்களுக்குச் செல்கிறது.

இடது வெண்டிரிக்கிளில் இருந்து சுத்த ரத்தம் மகாதமனி (Aorta) மூலம் உடலின் பல பாகங்களுக்குச் செல்கிறது.

நம் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்களிலேயே மிகப் பெரியது 'மகா தமனி.

இதயத்துக்கு ரத்தம் சப்ளை செய்பவை கரோனரி தமனிகள்.

மகா தமனி, நுரையீரல் சிரை ஆகியவற்றை மூடித் திறப்பது அரைலூனார் வால்வு

இடது ஆரிக்கின், இடது வெண்டிரிக்கின் இவற்றுக்கிடையே உள்ளது ஈரிதழ் வால்வு(Bicuspid Valve)

ஈரிதழ் வால்வின் வேறுபெயர் மிட்ரல் வால்வு(Mitral Valve)

வலது ஆரிக்கின், வலது வெண்டிரிக்கின் இடையே உள்ளது மூவிதழ் வால்வு.(Tricuspid Valve)


லப் டப் என்ற ஓசை இதயத் துடிப்பைக் காட்டுகிறது.

லப் என்ற ஓசை AV வால்வு மூடுவதால் ஏற்படுகிறது. 

டப் என்ற ஓசை அரைலூனார் வால்வு மூடுவதால் ஏற்படுகிறது.

இதயம் துடிப்பது நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறை.

பிறந்த குழந்தையின் இதயத்துடிப்பு  நிமிடத்துக்கு சராசரியாக 120 முறை.

இதயத்துடிப்பை அறிய உதவும் ஸ்டெதாஸ்கோப் கண்டுபிடித்தவர் ரானோலெய்னக்

இதயத்துடிப்பு வலது ஆரிக்கிளில் உள்ள SA முடிச்சில் தொடங்குகிறது.

SA முடிச்சு பேஸ்மேக்கர் என அழைக்கப்படுகிறது. 

இதயத்துடிப்பு பரவும் முறை SA முடிச்சு ---->AV முடிச்சு----> ஹிஸ்ஸின் கற்றை-------> பர்கன்ஜி நார்கள்

இதயத்துடிப்பை அலையடிவில் பதிவு செய்யும் கருவி ECG

ECG யைக் கண்டுபிடித்தவர் ஈந்தோவன்

உயிரினத்தின் உடல் அளவு குறைய குறைய இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகமாகும்

யானையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 24

ஹம்மிங் பறவையின்  இதயத்துடிப்பு  நிமிடத்திற்கு 1200. 

சுண்டெலியின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 500.

பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் இதயம் நான்கு அறைகள் கொண்டவை.

இருவாழ்விகளும் ஊர்வனவும் தலா மூன்று அறை இதயம் உடையவை

மீன்களின் இதயம் இரண்டு அறைகள் கொண்டவை

நான்கு அறை இதயம் கொண்ட ஒரே ஊர்வன முதலை

அதிர்ச்சியில் நின்றுபோன இதயத்தை துடிக்கவைக்கும் முதல் உதவிக்கு பெயர் CPR.


CPR- CARDIO PULMONARY RESUSSCITATION


💥💥💥💥சமச்சீர் கல்வி BIOLOGY Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்...💥💥💥💥

Post a Comment

Previous Post Next Post