ஆற்றல்- ENERGY



 ஆற்றலின் வகைகள்

  • அன்றாட செயல்பாட்டிற்கு ஆற்றல் அவசியம்.
  • இயற்பியலின் வரையறையின் படி ஆற்றல் என்பது ஒரு வேலையை செய்ய தேவைப்படும் திறன் ஆகும். இயக்கம்,வெப்பம்,மின்சாரம்,வேதி ஆற்றல், அணு ஆற்றல் என ஆற்றல் பல்வேறு வடிவில் இருக்கலாம்

  • ஆற்றலை நாம் உண்ணும் உணவிலிருந்து பெறுகிறோம்.
  • வேலை செய்ய தேவையான திறமையே ஆற்றல் ஆகும்.
  • நிலையாக உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் நிலையாற்றல்
  • இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல்
  • நிலையாற்றலும் இயக்க ஆற்றலும் சேர்ந்ததே இயந்திர ஆற்றல் எனப்படும்.
  • காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு, காற்றாலைகளின் மூலம் மின்னாற்றலைத் தயாரிக்கலாம்.
  • நாம் உண்ணும் உணவிலும் வேதி ஆற்றல் இருப்பதால்தான்,நம்மால் பல்வேறு வேலைகளை செய்ய முடிகிறது.
  •  அணைக்கட்டுகளில் நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
  • வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஜுல். இதனால்தான் ஆற்றலின் அலகை ஜூல் என்கிறோம்.
  • 1 நியூட்டனின் விசைக்கு எதிராக ஒரு பொருளை 1 மீட்டர் தூரத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையின் மூலம் மாற்றப்படும் ஆற்றல்  ஒரு ஜூல் ஆகும்.
  • மின்கலங்களில் உள்ள வேதி ஆற்றலிலிருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
  • எரிபொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றப்படுகின்றது.
  • மின்விளக்கில் மின் ஆற்றல் ஒளியாற்றலாகவும்
  • மின் விசிறியில் மின்னாற்றல் இயக்க ஆற்றலாகவும் மாறி கிடைக்கிறது.
  • அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கப்பெறும் வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது
  • காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது.
  • சூரியனிடமிருந்து இருந்து கிடைக்கும் ஆற்றலே சூரிய ஆற்றல் ஆகும்.
  • நிலக்கரியின் வேதியாற்றல், வெப்ப ஆற்றலாக மாற்றமடைந்து அதிலிருந்து மின்னாற்றல் கிடைக்கிறது.
  • ஒலிப்பெருக்கியில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
  • கி.மு. 212ல் ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தார்.
  • உயரத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் நிலை ஆற்றலானது கீழே விழும்பொழுது இயக்க ஆற்றலாக மாறி, மின்னாக்கியின் மூலம் சக்கரத்தைச் சுழலச் செய்வதால் மின் ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
  • மரம், நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை எரிய வைக்கும் போது வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக வெளிப்படுகிறது.
  • ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாகச் சேமித்து வைக்கின்றன.
  • மின்சார அழைப்பு மணி, கார்களில் உள்ள ஒலிஎழுப்பிகளில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
  • டார்ச் விளக்கில் உள்ள மின்கலத்தொகுப்பின் வேதி ஆற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.


ஆற்றல் மாற்றம்

  • இயக்க ஆற்றல் - மின் ஆற்றல், டைனமோ
  • மின் ஆற்றல் - இயக்க ஆற்றல், மோட்டார்
  • மின் ஆற்றல் - ஒளி ஆற்றல், மின் விளக்கு
  • ஒளி ஆற்றல் - மின் ஆற்றல், ஒளிமின்காலம்
  • காந்த ஆற்றல் - ஒலி ஆற்றல், டேப் ரிக்கார்டர்
  • மின் ஆற்றல் - வெப்ப ஆற்றல், இஸ்திரி பெட்டி
  • வேதி ஆற்றல் - வெப்ப ஆற்றல், சூரியன்
  • வேதி ஆற்றல் - மின் ஆற்றல், மின்கலம்

  • தேக்கிய அணைக்கட்டு நீர்: நிலை ஆற்றல் (PE)=mgh
  • திறக்கப்பட்ட அணைக்கட்டு நீர்: இயக்க ஆற்றல்(KE)=1/2mv2
  • அடிக்கப்பட்ட பந்தில் ஏற்படுவது: இயக்க ஆற்றல் 
  • பிடிக்கப்பட்ட பந்தில் இருப்பது: நிலை ஆற்றல்


ஆற்றல் அழிவின்மை விதி

  • ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
  • ஒருவகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்றலாம்
  • ஆற்றல் மாற்றம் நிகழும்போது சிறிது வெப்ப ஆற்றல் வெளிப்படும்



Post a Comment

Previous Post Next Post