ஐக்கிய நாடுகள் சபை (UNITED NATIONS)குறித்து தெரிந்து கொள்வோம்


 





ஐக்கிய நாடுகள் சபை - UNITED NATIONS

 Ø  முதல் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகள் இடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு பொது அமைப்பு தேவையென்ற நோக்கில் நாடுகளின் கூட்டமைப்பு (LEAGUE OF NATIONS) என்ற அமைப்பு 1920-21 ஆண்டுவாக்கில் துவக்கப்பட்டது. ஆனால் அது வெற்றிகரமான அமைப்பாக நீடிக்க இயலவில்லை.

Ø  1939- ஆம் ஆண்டு துவங்கிய இரண்டாம் உலகப்போர் நாடுகள் இடையேயான ஒரு பொது அமைப்பின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியது.

Ø  உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கியஅட்லாண்டிக் சாசனம்’ (1941, ஆகஸ்டு 14) ஐக்கிய நாடுகள் சபை உருவாகத்தின் முதல் படி எனலாம்.

Ø  1941-ல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

Ø  அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் 1945-ல் யால்டாவில் நடந்த கூட்டத்தில், லீக் ஆஃப் நேஷன்ஸ்-ன் அடிப்படையில் .நா. சபையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

Ø  -நா அமைப்பிற்கான சாசனம் அதனை ஐ.நாவின் அரசமைப்பு வரைவு இரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஆலோசனைப்படி அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள  தம்பாடன் ஒக்ஸ் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டது..

Ø  ஐக்கிய நாடுகள் சபை என்னும் பெயரைப் பரிந்துரைத்தவர் அமெரிக்க அதிபர் பிராங்ளின் டி.ரூஸ்வெல்ட்.

Ø  1945, ஜூன் 26-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த .நா. அவை உருவாக்க ஒப்பந்த கையெழுத்திட்டார்கள். போலந்து பிற்பாடு இதில் கையெழுத்திட்டது. ஆக 51- நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு இவ்வமைப்பு துவங்கப்பட்டது.

Ø  1945, அக்டோபர் 24-ல் .நா. அமைப்பு நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-ம் தேதி .நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Ø 1946 ஜனவரியில் இலண்டனில் ஐக்கிய நாடுகள் அவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

Ø  .நா. அமைப்பின் முதல் பொதுச் செயலராக நார்வே நாட்டைச் சேர்ந்த டிரைக் வே தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய பொதுச்செயலாளர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த அண்டோனியா கட்ரஸ்

Ø  எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பது .நாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

Ø  உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு இவற்றிற்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை (United Nations).

Ø  உலகில் அமைதியும், பாதுகாப்பையும் உறுதி செய்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மையை அகற்றல் ஒன்றுபட்டுச் செயல்பரிதல். உலக நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தல், இந்த பொது இலட்சியங்களை அடைய நாடுகளுக்கு உதவும் மையப்புள்ளியாக ஐ.நா அமைப்பு செயல்படுகிறது.

Ø  .நா. சாசனத்தை அங்கீகரித்து அதை நிறைவேற்ற விரும்பும் எந்தவொரு நாடும் .நா.வின் உறுப்பினராகலாம்.

Ø .நா. பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் பேரில் புதிய நாடுகளுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்படுகிறது. இதற்கு பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.

Ø  ஒரு தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களில் ஆதரவு வாக்கு வேண்டும். பாதுகாப்புச் சபையின் ஏனைய பத்து உறுப்பினர் நாடுகளின் அங்கீகரித்தாலும், ஏதொவதொரு நிரந்தர உறுப்பினர் நாடு வீட்டோ செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.

Ø நிரந்தர உறுப்பினர்கள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் உண்டு. ஐ-நாவில் இப்போது 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. கடைசியாக தெற்கு சூடான் உறுப்பினராக சேர்ந்தது. ஐ.நா. உருவானபோது (1945) அதில் வெறும் 50 நாடுகளே உறுப்பினராக இருந்தன.

 ஐநாவின் அங்கங்கள் (Principal Organs)

1.  ஐநா பொது அவை-GENERAL ASSEMBLY

2.  ஐநா பாதுகாப்பு கவுன்சில்-SECURITY COUNCIL

3.பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்-ECONOMIC AND SOCIAL COUNCIL (ECOSOC) - ...

4. சர்வதேச நீதிமன்றம்- INTERNATIONAL COURT OF JUSTICE)

5. தலைமையகம். SECRETARIAT - ...

6.பொறுப்பான்மை (அறங்காவலர் குழு) - TRUSTEESHIP COUNCIL (இதுதன் செயல்பாடுகளை 1994-ல் நிறுத்திவிட்டது)

ஐ.நாவின் தலைமையகம்:  நியூயார்க் 

(“ஜான்-நூ-ராக்பெல்லர் என்பவர் நன்கொடையாக அளித்த நிலத்தில்    கட்டிடம் அமைந்துள்ளது)

Ø  அலுவலக முகவரி: 

First Avenue, UN Plaza, New York City, New Yark, USA.

Ø  சின்னம்: இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்.

Ø கொடி: 1947 அக்டோபர் 20ல் .நா. பொதுச் சபை .நா.வுக்கான கொடியை அங்கீகரித்தது. இளநம் நீல நிற பின்புறத்தில் வெண்மை நிற .நா. சின்னத்தில், வட துருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக் கிளைகள் (அமைதியின் சின்னம்) சுற்றி நிற்பதாக அமைந்ததே .நா. கொடி. 1942, அக்டோபர் 20ம் தேதி அங்கீகரிகப்பட்டது. இந்த கொடிக்கு மேலே எந்த நாட்டுக் கொடியையும் பறக்க விடக்கூடாது.

Ø  ஆட்சி மொழிகள்: சீனம், அரபி, ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ். (FACERS)

Ø  செயலகத்தில் ஆங்கிலம், பிரெஞ்சுமே பயன்படுத்தப்படுகிறது. ஆவணங்கள் முதன் முதலில் ஆறு அலுவலக மொழிகளிலும் தயார் செய்யப்படுகிறது. பிற்பாடு உறுப்பினர் நாடுகளுக்கு அவரவர் மொழியில் மொழி பெயர்த்து வழங்கப்படுகிறது.

 

 

Post a Comment

Previous Post Next Post