இந்தியா- போட்டித் தேர்வுக்கு படிக்கத் துவங்குபவர்களுக்காக ஒரு பூகோளப் பார்வை..

போட்டித்தேர்வுகளில் தவிர்க்க முடியாத பகுதி இந்தியப் புவியியல்..இந்தியாவின் அமைவிடம் குறித்தும், அதன் புவியியல் அமைப்பு குறித்தும் மேலோட்ட தகவல்களும் புரிதலும் மிகவும் அவசியம். 

அவ்வகையில் ஒவ்வொரு பகுதியையும் ஆழமாக படிக்கும் முன்னர் முதல்முறை  போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் வசதிக்காக Quick Review அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன...  


இந்தியா- தீபகற்பம்

இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. எனவே புவியியல் அடிப்படையில் இந்தியா தீபகற்பம் எனப்படுகிறது.

 இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ ஆகும். வடக்கு தெற்காக 3,214 கீ மி நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ நீளமும் கொண்டுள்ளது.

 இந்தியா - துணைக்கண்டம்

இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. உலக புவியின் அடிப்படையில் இந்தியாவை ஒரு கண்டமாகவே கருதலாம். எனினும் அதன் பரப்புக்குறைவால் துணைக்கண்டம் என்றழைக்கின்றனர்.

 உலக பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாகும்.

 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.

ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா (RCCUBA) ஆகியவற்றுக்கு அடுத்து ஏழாவது மிகப்பெரிய நாடாக இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்தியாவின் அமைவிடம்.

 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.

 23 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது

கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம்சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.

 

இந்தியாவின் திட்ட நேரம்

இந்தியாவின் திட்ட நேரம் கிழக்கு தீர்க்கரேகை 82 1/2 ஆகும்

கிரீன் வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது.

 

இந்தியாவின் எல்லைகள்:

இந்தியாவின் தென்மேற்கில் அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள குடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது.

தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது.

இந்தியா அதிக அளவு எல்லையை வங்காளதேசத்துடன் கொண்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு-தெற்கு தூரம் 3214 கி.மீ

கிழக்கு-மேற்கு தூரம் 2933 கி.மீ.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும்.

இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளம் 5700 கி.மீ.

இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்களில் குஜராத் முதலிடமும் ஆந்திரப்பிரதேசம் இரண்டாமிடமும் வகிக்கின்றன

அருணாச்சலப்பிரதேசத்தில் துரியன் தோன்றிய பின், சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே குஜராத்தில் சூரியன் தோன்றுகிறது.

 

இந்திய எல்லை கோடுகள்

மக்மோகன் எல்லைக்கோடு: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையாக இமயமலைகள் விளங்குகி இவ்விரு நாடுகளையும் மக்மோகன் எல்லைக்கோடு பிரிக்கிறது. இக்கோடு இமயமலைகளின் ஊடாகச் செல்கிறது.

பாக்ஜலசந்தி: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது.

சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையாக சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு விளங்குகிறது.

இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி உள்ளது

இந்தியாவின் தென்கிழக்கே அந்தமான் நிக்கோபார்தீவுகளில் இந்திரா முனை உள்ளது.

 

இந்தியாவின் புவியியல் மண்டலங்கள்

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 43.3 சதவீதம் சமவெளிகளும்

10.7 சதவீதம் மலைகளும்

18.6 சதவீதம் குன்றுகளும்

27.7 சதவீதம் பீடபூமிகளும் உள்ளன

இந்தியா ஏழு புவியியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது :

வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்

இந்திய கங்கைச்சமவெளி

தார் பாலைவனம்

மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி

கிழக்குக் கடற்கரை

மேற்குக் கடற்கரை

கடல்கள் மற்றும் தீவுகள்

 

கங்கைச் சமவெளி

இந்திய கங்கைச் சமவெளி சிந்து கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அசாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாக செல்கிறது.

இச்சம்வெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் ரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.

 

இந்தியப் பாலைவனம்: தார்

பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது

பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.

இப்பாலைவனத்தின் 61 சதவீத பகுதி ராஜஸ்தானிலேயே உள்ளது

 

இந்தியாவின் மலைப்பகுதிகள்

இந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்

இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளம், கர்நாடக மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரவி, மும்பை அருகே முடிவு பெறுகிறது.

தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன

இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மலைத் தொடர்ச்சிகளாகும்.

இளம் மடிப்பு மலைகள் என்று அழைக்கப் படும் இமயமலைப் பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் காஷ்மீர் முதல் ஏழு சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைந்துள்ளன.

மத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் உள்ளது.

 

இந்திய உயர்நிலங்கள்/பீடபூமிகள்

கிழக்கு கடலோர சமவெளி

கிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா உள்ளது

மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ளது

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை கெண்டது.

தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள்

வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது.

வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது

அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச் மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுல மாற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை


சமவெளி :

ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன

 

மேற்குக் கடற்கரை சமவெளி

மேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது

இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வள்ைகுடா முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.

உலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.

இதனை 2012ஆம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது இது இமயமலையைவிட பழமையானது.

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளினால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும் .

இந்த மலைத்தொடரானது குஜராத் மாநிலத்தில் தபதி நதியில் தொடங்கி மஹாராஷ்டிரம், கர்நாட்கம், வழியாக கன்னியாகுமரி வரை 1600கி.மீ. தூரத்திற்கு வரைபடத்தில் சங்கிலித் தொடர்பு போல நீண்டுள்ளது.

 

இந்திய தீவுகள்

அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையை ஒட்டி அமைந்த இலட்சத் தீவுகள் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவில் வடக்கு தெற்காக நீண்ட சங்கிலித் தொடராய் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தியாவிற்குள் அடங்குகின்றன.

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும்

இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும்

இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது.

அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும்.

 

இலட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று

இதன் தலைநகரம் கவரத்தி ஆகும்

இது மொத்தம் 30 சதுர கிமீ பரப்பளவு கொண்ட் 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக்கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமின்திவ் ஆகும்..

 

சதுப்பு நிலங்கள்

மேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும்

இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்

சுந்தரவனக்காடுகள் நிறைந்த பகுதி மே.வங்கம்,பிச்சாவரம், கட்ச் வளைகுடா ஆகியன.

💥💥💥💥

சமச்சீர் கல்வி புவியியல்(GEOGRAPHY) STUDY MATERIALS DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்... 

💥💥💥💥

- மேலே உள்ள தகவல்கள் இந்தியாவின் புவியியல் அமைப்பு குறித்த ஒரு தெளிவான பார்வையை நமக்கு அளிக்கும்... இனி  அடுத்தத்தடுத்த பாகங்களில் எஞ்சிய பகுதிகளை பார்ப்போம்... 


Post a Comment

Previous Post Next Post