Prime எண் என சொல்லப்படும், பகா எண்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் எண் 73
The Big Bang Theory என்ற ஆங்கில தொலைகாட்சி தொடரில் வரும் கதாநாயக்கன் ஷெல்டன் கூப்பர் என்னும் விஞ்ஞானி பெரும்பாலான காட்சிகளில் இந்த எண் பொறிக்கப்பட்ட டிஷர்ட் அணிந்தே வருவான்
அதில் ஒரு காட்சியில், ஷெல்டனிடம் அவன் நண்பன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில், வரும் வசனம் இது
ஷெல்டன்:
இருக்கும் நம்பர்களிலேயே 73 தான் பெஸ்ட் ஏன் தெரியுமா, 73 ஒரு ப்ரைம் நம்பர், அதை திருப்பி போட்டால் 37 அதுவும் ப்ரைம் நம்பர், 7X 3=21, 73 என்ற நம்பர் 21ஆவது ப்ரைம் நம்பர், அதை திருப்பி போட்டாடல் 12, அதே போல 37 என்பது 12ஆவது ப்ரைம் நம்பர்
லியனார்ட்(நண்பன்):
சரிப்பா நம்பர்களின் சக் நாரிஸ்(ஹாலிவுட் எம்.ஜி.ஆர் என்று வைத்து கொள்ளுங்கள்) 73ஆம் நம்பர் தான் நாங்க ஒத்துக்குறோம்
ஷெல்டன்:
அது எப்படி பைனரி நம்பராக 73ஐ மாற்றினால் 1001001, அது ஒரு பாலின்றோம் அதாவது தலைகீழாக வாசித்தாலும் 1001001, சக் நாரிஸ் என்ற பேரை தலைகீழாக வாசித்தால் Sirron Kcuhc என்று தான் வரும்
இந்த காட்சி மிக பிரபலம் ஆனா காரணத்தால் 73ஐ Sole Sheldon Prime என்றும் இப்போது அழைக்கிறார்கள்
இப்படி அந்த காட்சி செல்லும், இந்த தொலைக்காட்சி சீரியலில் இது ஒன்று மட்டுமல்ல பல பல அறிவியல் கணிதம் சார்ந்த செய்திகள் வேடிக்கையாக சேர்க்கப்பட்டிருக்கும்
73இந்த சிறப்பு இதோடு நிற்கவில்லை
73 என்பதை ஆங்கிலத்தில் Seventy Three என்று எழுத்தால் எழுதினால் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை 12, 73rd என்று அதன் இடத்தை ஆங்கிலத்தில் Seventy Third என்று எழுதினாலும் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை 12
7ன் மூன்று மடங்கு (7X 7X 7) = 343 இதுவும் ஒரு பாலின்றோம், முதல் இரண்டு எண்களை கூடினால் 7 மறுபடியும் 73
லீப் வருடம் தவிர்த்த மற்ற வருடங்களின் மொத்த நாட்களை 5 ஆல் வகுத்தால் (365/5) விடை 73, அந்த முதல் 73ஆவது நாள் மார்ச் மாதம் 14, அந்த தேதி உலக Pi தினமாக கொண்டாப்படுகிறது
பைபிள் என்றால் பலர் எழுதிய புத்தகங்களின் தொகுப்பு என்று லத்தீனில் பொருள் , பைபிளில் மொத்தம் தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 73
அந்த காலத்தில் தந்தி அனுப்பும் போது வாழ்த்து செய்திகளை உதாரணமாக 10 என்று எழுதி கொடுத்தால் போதும், தந்தியை பெரும் நபருக்கு, Happy Birthday என்று செய்தி போகும் அது போல 73 என்று மோர்ஸ் கோட் மூலம் செய்தி அனுப்பினால் அது Best Regards என்று எதிர் புறம் புரிந்து கொள்ளப்படும் 73 எண்ணுக்கான அந்த மோர்ஸ் கோட் (கட் கட் கடா கடா கடா கடா கட் கட்) இதுவும் ஒரு பாலின்றோம்
அது போல கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் இருந்து தும்கூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் எண் 73, இதன் தூரம் 317கிமி, சொல்ல மறந்துட்டேன் 317ம் ப்ரைம் நம்பரை தான்
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் 73ஆம் எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன ஆனால் அவற்றின் தூரம் எல்லாம் ப்ரைம் நம்பறா என்று தெரியாது
இந்த செய்திகள் போதுமா...
அப்புறம் இந்த எண் பிரபலம் ஆக காரணமான செல்டன் கதாபத்திரத்தில் நடித்த நடிகரின் பெயர் ஜிம் பார்சன் அவர் பிறந்த ஆண்டு..............
ஆமாம் நீங்க நினைப்பது போலவே 73 தான்
