சிறுகோள் தினம்- June 30
The Great Tunguska event
நீங்கள் மேலே புகைப்படத்தில் பார்ப்பது கால்பந்து மைதான படமல்ல... சிறுகோள் மோதலில் அழிந்து புல் பூண்டு முளைக்காத பூமிப் பிரதேசம்..
1908 ஜூன் மாதம் 30-ஆம் தேதி ரஷியாவில் உள்ள ஒரு பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று வானில் தோன்றி வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் சுமார் 75 மில்லியன் மரங்கள் அழிந்துபோயின.
50 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.
இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாக இருந்ததால் ஒருவரும் இறந்ததாக தகவல் இல்லை.
இந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக உலகில் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது
இதுபோன்ற Tunguska நிகழ்வைவிட பெரிய சிறுகோள்கள் பூமியில் மோதியுள்ளன.
66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் சிறுகோள் மோதலில்தான் டைனோசர்களை பூமியில் இருந்து அழித்ததாக கூறப்படுகிறது.

