பரிணாமம்(Evolution) & மானுடவியல் (Anthropology)
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தைநோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
மனிதனின் அறிவியல் பெயர்: ஹோமோ சேப்பியன்ஸ்
- கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோ சேப்பியன்ஸ் உலகின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறினார்கள்.
- அவர்கள் வாழ்ந்த சூழலுக்குத் தக்கபடி அவர்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது.
- வாழுமிடத்தின் வானிலை, காலநிலை மற்றும் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் உடலமைப்பும் தோல் நிறமும் வேறுபட்டன. இதனால் வெவ்வேறு இனங்கள் தோன்றின.ஒவ்வொரு இனமும் வழித்தோன்றல்களை உருவாக்கியது. மக்கள்தொகை அதிகரித்தது.
தற்போதைய மேம்பட்ட மனிதனின் இனம் ஹோமோ சேப்பியன்ஸ்
மானுடவியல் (anthropology)
- மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும் மானுடவியல்(anthropology)என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
- anthropos என்பதன் பொருள் மனிதன். logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம். மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.
மனித இனங்களும் அவர்களது
வாழ்விடங்களும்
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா
- ஹோமோ ஹெபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா
- ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
- நியாண்டர்தால் - யூரோசியா(ஐரோப்பா மற்றும் ஆசியா)
- குரோ-மக்னான்ஸ் -பிரான்ஸ்
- பீகிங் மனிதன் - சீனா
- ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா
- ஹைடல்பர்க் மனிதன் - லண்டன்

