புதுச்சேரி பற்றி அறிவோம்... - Part 1

 


புதுச்சேரியில் அரசு போட்டித்தேர்வுகளில் புதுச்சேரி சார்ந்த வரலாறு, இயற்கையமைப்பு குறித்த வினாக்கள் கேட்கப்படுகிறது.. 

நம்மில் பலருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத தகவல்களை தொகுத்துள்ளோம்.. 

Part-1....

புதுச்சேரி- முக்கிய குறிப்புகள் (UT of Puducherry) (Important Points to Remember)

1. புதுச்சேரி யூனியன் பிரதேசம் 4 பகுதிகளை கொண்டது-(புதுவை,காரைக்கால்,மாகி,ஏனம்) (PKMY)

2.     மாகே- கேரளப்பகுதி,ஏனம்- ஆந்திரா, காரைக்கால்&புதுவை-தமிழகப்பகுதி (Borders of Pdy UT)

3.     விடுதலைக்குமுன் புதுவையுடன் இருந்த சந்திரநாகூர்- மேற்கு வங்கம் (West Bengal)

4.     புதுச்சேரியின் பரவல்-- 110 46 முதல் 120 3 வட அட்ச ரேகையிலும் 790 37 முதல் 790 53 பாகை வரை தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது (Lattitude and Longitude)

5.     புதுவை மாநிலத்தின் மொத்த பரப்பு- 492 ச.கி.மீ (Area of Puducherry UT)

6.     புதுச்சேரி -293 ச.கி.மீ, காரைக்கால்- 160 ச.கி.மீ, மாகே-9 ச.கி.மீ, ஏனம் 30 ச.கி.மீ (Regionwise Area)

7.     இந்தியாவின் நிலப்பரப்பில் புதுவை யூனியன் பிரதேசத்தின் பரப்பு 0.1 சதவீதம் ஆகும் (Area %)

8.     புதுவை ஏறக்குறைய 280 வருடங்கள் பிரெஞ்ச்சியர்களால் ஆளப்பட்டது (Frensh Rule in Puducherry)

9.     இந்தியாவுடன் டி-ஃபேக்டோ ஒப்பந்தம் மூலம் இணைந்தது- 21 அக்.1954 (De facto)

10.   புதுச்சேரி விடுதலை நாள் 01 நவம்பர்1954  (De-facto power of administration handover)

11.   முதல் சீஃப் கமிஷனராக ராமு என்பவர் 1954-ல் நியமிக்கப்பட்டார் (Ist Chief Commissioner)

12.   ட்ரீட்டி ஆஃப் செஷன்- பிரெஞ்ச்-இந்திய ஒப்பந்தம் – 28 மே.1956 ல் கையெழுத்தானது (Treaty of Cession)

13.   பிரெஞ்ச்-இந்திய ஒப்பந்தம் – ஜவகர்லால் நேரு மற்றும் கவுண் ஆஸ்ட்ரோராக் ஆகிய இருவருக்குமிடையே கையெழுத்தானது (Dejure)

14.   டி.ஜூர் ட்ரான்ஸ்ஃபர் ஆஃப் பாண்டிச்சேரி ஒப்பந்த மாற்றம் செய்யப்பட்டது – 16 அக்.1962 (Transfer of Dejure)

15.   ஒப்பந்தம் நிறைவேறியபின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 1வது பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு புதுவை இந்தியாவின் ஒரு பகுதியாக உருவெடுத்தது (Puducherry become part of India)

16.   இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்து 239 A (14-வது சட்டத்திருத்தம்) புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்த்து அளித்துள்ளது (Constitutional Amendment)

17.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 4வது பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டதின்மூலம் புதுவைக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தலா ஒவ்வொரு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது (1 Lok Shaba Seat and 1 Rajya Sabha Seat)

18.   புதுச்சேரி நிர்வாக சட்டம் (The Pondiherry Administration Act 1962) 1962-ல் நடைமுறைக்கு வந்தது

19.   புதுச்சேரி குடியுரிமை தொடர்பாக (The Citizenship(Pondicherry) order) ஆணை 29. நவ 1962-ல் வெளியிடப்பட்டது

20.   புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஷரத்து 239-ன் கீழ் குடியரசுத்தலைவரின் நிர்வாகத்திற்கு கீழ் வந்தது. (Under the Administration of President of India through Lt.Governor)

21.   புதுச்சேரியின் நிர்வாகியாக லெப்டினண்ட் கவர்னர் பதவி உருவாக்கப்பட்டது (Administrator)

22.   The Pondicherry Union Territory At 1963 – 1 அக்.1963-ல்  நடைமுறைக்கு வந்தது

23.   The Pondicherry Union Territory பிரிவு 18-ன் படி புதுச்சேரி சட்டமன்றம் அனைத்துவிதமான பொருட்களிலும்(subjets) சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது

24.   புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 30 (Member of Legislative)

25.   நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 (Nominated Members)

26.   புதுச்சேரி-23 , காரைக்கால்-5 , மாகே-1, ஏனம்-1 (தனித்தொகுதிகள் -5) (Legislative Constituencies)

27.   பண மசோதாக்களை புதுவை சட்டப்பேரவையில் நிர்வாகியின் பரிந்துரை பெற்று தாக்கல் செய்யப்பட வேண்டும் (Money bills should be ratified with the concurrence of Administrator)

28.   அலுவல் விதிகள் 4-ன் படி ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை மந்திரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் உரிமையை துணைநிலை ஆளுநர் பெற்றுள்ளார் (Puducherry Rules if Business)

29.   Head of the Department என்பவர்- துறைச் செயலர் (Department Secretary)

30.   புதுவையின் முதல் துணைநிலை ஆளுநர் S.L. SALEEM (Ist Lt.Governor (HLG)

31.   முதல் பெண் துணைநிலை கவர்னர்- சந்திராவதி (Ist Women L.G)

32.   புதுச்சேரியில் நகராட்சிகள் – 2, கொம்யூன்கள்-5 (Municipalities and Communes)

33.   காரைக்காலில் ஒரு நகராட்சி மற்றும் 5 கொம்யூன்கள்(

34.   மாகே மற்றும் ஏனத்தில் தலா ஒரு நகராட்சி மட்டும் உள்ளது, கொம்யூன்கள் இல்லை.

35.   Pondicherry is the window of French culture in India என சொன்னவர் ஜவகர்லால் நேரு

36.   புதுச்சேரியில் உள்ள அலுவல் மொழிகளின் எண்ணிக்கை  ஐந்து (Official Languages- Tamil,Malaiyalam,Telegu,English and French)

37.   புதுவையில் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் (Fishing & Agriculture)

38.   பெரிப்ளஸ் ஆஃப் எரித்ரேயன் சீ (The Periplus of Erytheraean Sea) நூலில் பொதுகே (Podouke) என புதுச்சேரி குறிப்பிடப்படுகிறது.

39.   தாலமி (Ptolemy) நூலில் பொதுகா (Podouka) என குறிப்பிட்டுள்ளார். தமிழக கடற்கரை-டிமிட்ரிகா, பூம்புகார்-காமரா, மரக்கானம்-சோபட்மா என குறிப்பிடப்பட்டுள்ளன.

40.   THE CITY OF DAWN எனப்படுவது ஆரோவில் (Auroville)- founded in 1968 by the spiritual leader Mirra Alfassa


Post a Comment

Previous Post Next Post