அரசுப் போட்டித்தேர்வில் மிக முக்கிய பகுதி சூழலியல்(Ecology)..
சூழலியல் எனும் சின்ன சுழலில் சிக்கிவிடுவோமென Skip செய்யாமல் அதில் உள்ள நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொண்டால் நிச்சய வினாவில் மார்க் எடுத்துவிடலாம்...
கீழே 👇 சூழலியல் தொடர்பான சில அடிப்படை தகவல்கள்.. பழைய போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட விஷயங்கள்..
- Ecology என்பது கிரேக்க வார்த்தை / அதன் பொருள் : வீடு (அல்லது) வாழும் இடம்.
- Ecology என்ற வார்த்தையை அறிமுகம் செய்தவர் : Reiter
- Father of Ecology : Alexander Von
Humboldt
- Father of Indian Ecology: R. Misra
- Father of Modern Ecology: P.Odum
சூழலியல் (Ecology) பிரிவுகள் :
- Autecology தனிப்பட்ட உயிரினத்தைப் பற்றி படிப்பது.
- Synecology ஒரு குழுவிற்கும் சுற்றுப்புறத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி படிப்பது.
- Genecology - சுற்றுப்புற தகவமைப்பிற்கு ஏற்ப ஜீன் மாறுபாடு அடைதலைப் பற்றி படிப்பது. (பிறப்புச்சூழல்)
- Paleocecology - சுற்றுச்சூழலைப் பொறுத்து தொல் உயிரிகள் பற்றி படிப்பது.
- Applied ecology - மனித குல மேம்பாட்டிற்கு சுற்றுச்சூழலை பயன்படுத்துவது.
- Systems ecology : சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான ஒழுங்குமுறை வரையறைகள்.
- Bio ecology தாவரம் மற்றும் விலங்கு சுற்றுச்சூழல் பற்றிய ஒருங்கிணைந்த படிப்பு.
1. உற்பத்தியாளர்கள் (Producers) :
ஒளிச்சேர்க்கை மூலம் தனது உணவை தானே தயார் செய்து கொள்ளும். - எ.டு : தாவரம் 6Co2+12H2o–C6H12O6+6O2+6H2O
2. நுகர்வோர்கள் (Consumers) :
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொள்பவை.
3. சிதைப்பவை (Decomposers) :
இறந்த பொருட்களை உண்டு ஆற்றலைப் பெறுபவை. சிதைப்பதன் மூலம் கனிமங்கள் மீண்டும் மண்ணுக்குள் செல்கின்றன. எ.டு : பாக்டீரியா, பூஞ்சை (இயற்கை துப்புரவாளர்கள்)
2. உயிரற்ற காரணிகள்:
காற்று, நீர், மண், ஒளி, வெப்பநிலை ஆகியவை ஆகும். பசும் தாவரம் உயிர்வாழ ஒளி, நீர் CO2 தேவை. விலங்குகள் உயிர்வாழ உணவு, நீர், உயிர்வளி O2 , தேவை.
மேலுள்ளவர்களை இணைத்துள்ள சங்கிலி உணவுச்சங்கிலி.. அதுவே சூழலியியலின் உயிர்ச்சங்கிலி..
உணவுச் சங்கிலி
(Food Chain)
- தற்சார்பு உயிரிகளான பசும் தாவரங்கள் முதலில் சூரிய ஆற்றலை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் நீர் சேர்த்து உணவாக மாற்றுகின்றது.
- இதுவே உணவு உற்பத்தியாளர்கள் ஆகும்.
- இந்த ஆற்றல் முதல் நிலை நுகர்வோரான, தாவர உண்ணிகளுக்கு மாற்றப்படுகின்றது. ஊண் உண்ணிகள் (2ம் நிலை நுகர்வோர்) தாவர உண்ணிகளை உண்ணும் பொழுது ஆற்றல் மாற்றம் நடைபெறுகின்றது.
- சிதைப்பவைகள் மூலம் இறந்த ஊண் உண்ணிகளிலிருந்து ஆற்றல் சுற்றுச்சூழலில் விடுபடுகின்றது.
- இந்த ஆற்றல் மாற்றப்படுகின்ற தொடர் ஓட்டம் உணவு சங்கிலி எனப்படும்.
- அதாவது சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் உண்ணுதலும் அவை உண்ணப்படுதலும் சேர்ந்த நிகழ்ச்சியே ஆகும்.
1. புல்வெளியில் உணவுச்
சங்கிலி:
நெல் –-> எலி -->பாம்பு --> கழுகு
(உற்பத்தியாளர்) (தாவர உண்ணி) (முதலாம் ஊண் உண்ணி) (2ம் ஊன் உண்ணி)
2. காடுகளில் உணவுச் சங்கிலி
:
புல் –-> முயல் --> நரி -->புலி
(உற்பத்தியாளர்) (முதல் நிலை நுகர்வோர்) (முதல் நிலை ஊண் உண்ணி) (இரண்டாம் ஊண் உண்ணி)
3. குளத்தில் உணவுச் சங்கிலி
:
தாவர மிதவை உயிரி --> பூச்சி --> சிறிய மீன் –-> பெரிய மீன் --> மனிதன்
ஊட்ட நிலை : உணவு சங்கிலியில் ஒவ்வொரு உயிரிகளும் குறிப்பிட்ட நிலையில் இடம் வகிக்கிக்னறன.
உணவுச் சங்கிலியில் ஒரு உறவு உடைந்தாலும் அதன் முடிவு ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் அழிவே ஆகும்.
இது போட்டித்தேர்வுக்கான தகவல் மட்டுமல்ல.. இப்பூவுலகின் இதயத்துடிப்பு...
அடுத்து வேறொரு தலைப்பில் சந்திப்போம்..
தொடர்ந்து வாருங்கள்...
போட்டித்தேர்வுக்கு படிப்போம்.. அறிவை வளர்ப்போம்..
