ஜூலை’01-மருத்துவர்கள் தினம் (JULY 1- DOCTOR’S
DAY)
டாக்டர். B.C. ராய் (1 July 1882 – 1 July 1962)
ஆண்டுதோறும்
ஜூலை 1-ம் தேதி இந்தியாவில்
மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது. 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது
இந்தியா பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. அவர்களைப் போன்ற ஒருவர்தான் B.C.ராய்..
புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் விளங்கியவர்தான் மதிப்பிற்குரிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்).
பல மருத்துவமனைகளையும், ஆராய்ச்சி மையங்களையும், நிறுவனங்களையும் தொடங்கி இந்திய சமுதாய வளர்ச்சிக்காகப் பல நன்மைகளை ஆற்றியவர் B.C.ராய்.
அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நமது வாழ்க்கையில் மருத்துவர்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டவும்,
மருத்துவர்களின் சுயநலமற்ற சேவைக்கும், தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் அவர்கள் வழங்கும் பங்களிப்பிற்கும் நன்றிபாராட்டவே
இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய பெருந்தொற்று கோவிட்-19 காலத்தில் காலனை எதிர்த்து போராடி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை வணங்குவோம்..
