OLD IS GOLD… Previous is precious

OLD IS GOLD… Previous is precious!

போட்டித்தேர்வுகளில் வெல்வது ஒருவகை கலை.. அதன் சூட்சுமம் புரிந்தால் வெற்றி வசப்படும். அந்த வகையில் Previous Year Question Papers புதியதாக தேர்வு எழுத செல்வோருக்கு மிகப்பெரிய உதவி..

எந்த ஒரு போட்டித்தேர்வுக்கும், முந்தைய தேர்வுகளின் கேள்வித்தாள்கள் (Previous Year QPs) அளவுக்கு வேறு எவையுமே சரியாக வழிகாட்ட முடியாது. முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், எந்தெந்தப் பாடப் பிரிவுகளிலிருந்து கேட்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்து, இந்த ஆண்டுத் தேர்வுக்கான தயாரிப்பு முறையைத் தீர்மானிக்க வேண்டும்.

Syllabus-பாடத்திட்டம் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் எல்லாமே நேரடி கேள்விகளாகவே இருக்கும்.. உதாரணம், TNPSC. அவற்றில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பாலும் நாம் பள்ளிப் பாடங்களில் படித்தவையாக இருக்கும். அவற்றை நாம் போட்டித்தேர்வு நோக்கில் மீண்டும் மனப்பாடம் ஆகவில்லையென்ற கவலையில்லாமல் படிக்க வேண்டும்.

TNPSC  தேர்வுகளில் (குரூப் 1 தவிர்த்து)  வெல்ல 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களையும், 11, 12-ஆம் வகுப்புகளில் தேர்வுப் பாடத்திட்டங்களுக்கு உரிய பாடங்களையும் படித்தால் போதும்.

PUDUCHERRY GOVT.EXAM-களில் வெல்வதற்கு மேற்கூறிய பாடங்களோடு STATIC GK முறையில் அனைத்து தலைப்புகளையும் படித்து,  பிற மாநில முந்தைய தேர்வுத்தாள்களையும் Revision செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

பாடத்தில் போதிய அறிவு இருந்தாலும், கேள்விகளை நன்கு படித்துப் பார்த்து அதன்பிறகே பதில் அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி தேர்வுகளைப் போல மனப்பாடம் செய்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகக் கூடாது. பாடத்தை நன்கு உணர்ந்து, அதில் தெளிவு பெறுதல் அவசியம்.

நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் குறித்து அறிந்து கொண்டேயிருத்தல் அவசியம்.

அதேபோல எவ்விதத்திலும் கவனத்தை சிதற விடாமல் போட்டித் தேர்வுக்கென திட்டமிட்டு குறைந்தபட்சம் ஆறுமாத காலம் தொடர்ந்து படித்தால் மட்டுமே வெற்றி பெறுவது சுலபம்.

இறுதியாக…

பல ஆயிரம் பேர் எழுதும் தேர்வில் நாம் எப்படி வெற்றிபெற முடியும் என்கிற பயம் பலருக்கும் இருக்கும். எத்தனை ஆயிரம் பேர் எழுதினாலும், கடினமாக உழைக்கக்கூடியவர்கள் மிகக் குறைவு. ஆகவே, உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி எளிது.

பள்ளி, கல்லூரியில் எடுத்திருக்கும் மதிப்பெண்ணை வைத்துப் போட்டித் தேர்வுகளை மதிப்பிட வேண்டாம். கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர்கள்கூடப் போட்டித் தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சியடையாமல் போனது உண்டு.

அதேபோல, குழுவாகப் படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கியமான படிப்பு முறை. குழுவாக இணைந்து படிக்கும்போது மற்றவர்கள் மூலமாக நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

படியுங்கள்.. எங்கள் குழுவோடு இணைந்து பயணியுங்கள்..பயமும் தயக்கமுமின்றி போட்டித்தேர்வை எதிர்கொள்ள நாங்கள் பலம் அளிக்கிறோம்..

உங்கள் படிப்புத் தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்... 


Post a Comment

Previous Post Next Post