ஜூலை'11- உலக மக்கள்தொகை தினம்

  


உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது… இந்த வரிகளில் உலகம் அதிர்ந்துபோனது.

 

சுமார் 24 ஆண்டுகள் முன்பே அதாவது 1987-ஆம் ஆண்டிலேயே இந்த எண்ணிக்கையை எட்டிய உலக மக்கள்தொகை இன்று 800 கோடியை நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறது..

 

1987-ஆம் ஆண்டு, ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள்தொகை 5 பில்லியனை (500 கோடி) எட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் உணர்ந்தன.

 

ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அவையில் மக்கள்தொகை கட்டுப்படுத்துதல் தொடர்பாக  தீர்மானம் கொண்டு வந்தன. 500 கோடியை எட்டி அபாய மணி அடித்த நாளினை  நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்க முடிவு செய்தது. அவ்வாறாக, 1990-ஆம் ஆண்டு ஜூலை 11-ஐ உலக மக்கள்தொகை தினம் என்று ஐ.நா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

மக்கள்தொகை கோட்பாட்டினை வெளியிட்ட அறிஞர் மால்தஸ் என்பவர் மக்கள்தொகை அதிகரிப்பு பெருக்கல் விகிதத்தில் செல்வதாக விளக்கியுள்ளார். ஆம் .. மக்கள்தொகை அதிகரிப்பு 2,4,8,16,32… என்று பெருகிக் கொண்டே இருக்கிறது. அதேசமயம் உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்தில் 1,2,3,4.. என்ற விகிதத்தில் இருப்பது பெரும் அச்சுறுத்தல் ஆகும்.

 

மக்கள்தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு போன்றவை அவசியம் என உணர்ந்தாலும், அது மனித உரிமை மீறலாக கருதப்பட்டு சுகாதாரமான குழந்தைப் பிறப்பும், பெண்கள் ஆரோக்கியமும்  அவசியாமக கவனிக்கப்பட வேண்டியவை என்ற கருப்பொருளை ஒரு மக்கள்தொகை தினத்தில் ஐ.நா வலியுறுத்தியது.

 

இன்று உலக மக்கள் தொகையில் ஐந்து நாடுகளின் மக்கள் தொகை மட்டும் 44 சதவீதமாக இருக்கிறது.


சீனாவில் 140 கோடி மக்கள் தொகை உள்ளது. உலக மக்கள் தொகையில் 19 சதவீதம் இந்த நாட்டில் உள்ளது.  


உலக மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துள்ள சீனா, இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள்தொகை வேகத்தினைப் பார்த்து முதலிடம் பறிபோய்விடுமென அஞ்சிவிட்டதாவென தெரியவில்லை. தற்போது சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என உள்ள சட்டத்தை அண்மையில் அந்த நாடு தளர்த்தியுள்ளது.

 

மக்கள்தொகை கணக்கில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 135 கோடி மக்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் இது 18 சதவீதம் ஆகும்.


அமெரிக்கா 32.5 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.


அடுத்ததாக 26.18 கோடி மக்கள் தொகையுடன் இந்தோனேஷியா நான்காம் இடத்தில் உள்ளது.


பாகிஸ்தான் 21 கோடி மக்கள் தொகையுடன், ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

உலகின் தற்போதைய மக்கள் தொகை 780 கோடியை தாண்டி விட்டது. இப்படியே போனால் 2030ல் 850 கோடி, 2050ல் 970 கோடியாகவும் அதிகரிக்கலாமென எதிர்ப்பார்க்கிறார்கள்.

 

மக்கள் தொகை உயர்வால் ஒவ்வொரு நாட்டிலும் குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலைவாய்ப்பு இல்லாமை, சுகாதாரம், உணவு, கல்வி, போக்குவரத்து, இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

 

2021உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள்(Theme) ‘கருவுறுதலில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம்’ என்பதாகும். 


மக்கள்தொகையை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அரசுகள் தம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சுகாதாரமான இனப்பெருக்கம், மக்கள்தொகை பற்றிய கல்வி, பள்ளிகளில் இடம் பெற வேண்டும். 

 

 

 

 

 

 

 


Post a Comment

Previous Post Next Post