சிந்துசமவெளி நாகரீகம்
1. நதிக்கரையோர நாகரீகங்கள்:- நைல் நைதி-எகிப்து நாகரீகம் /யூப்ரடிஸ்,டைகிரிஸ் நதிகள்-மெசபடோமியா நாகரீகம்/ ஹோவாங்கோ நதி- சீன நாகரீகம்
2. உலகில் தோன்றிய முதல் நாகரீகம் சுமேரியன் நாகரீகம் எனப்படுகிறது.
3.மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம். – செம்பு
4.சிந்துசமவெளி நாகரீகம் செம்பு காலத்தை சார்ந்த நாகரீகம்.
5.சிந்துசம்வெளி நாகரீகம் ஹராப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
6.சிந்து சமவெளி நாகரீக இடிபாடுகள் கண்றியப்பட்ட இடங்கள். – மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன் (ராஜஸ்தான்), லோத்தல்(குஜராத்).
7. சிந்துசமவெளி நாகரீகம் எனும் ஹரப்பா நாகரீகம் இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரீகம்.
8. ASIATIC SOCIETY OF INIDA எனும் கல்வெட்டு சேகரிப்பு அமைப்பு சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் 1784-ல் நிறுவப்பட்டது. பின்னாளில் 1826-ல் ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் கல்வெட்டுகளில் காணப்பட்ட பிராமி எழுத்துமுறையை படிக்கும்முறையை கண்டறிந்தார்.
9.கி.பி.1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளையான ராவி நதிக்கரையில் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. அப்போது கட்டிட சிதைவுகள் கிடைக்கப்பெற்றன.
10. கார்பன் கணிப்புப்படி சிந்துசமவெளி காலம் கி.மு.3250-கி.மு.2750
11. 1921-22 ல் சர் ஜான் மார்ஷல் தலைமையில் ஹரப்பா பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
12. தொல்பொருள் இலாகா தந்தை எனப்படுபவர்-அலெக்சாண்டர் கன்னிங்காம்.
13.மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு பொருள்- இறந்தவர் மேடு, ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு பொருள் – புதையுண்ட நகரம்
14.சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன. – பயன்பாட்டு அறிவியல்
15.சிந்து சமவெளி நாகரீகத்தில் எடைக் கற்கள் ஒரு வகைத் திண்மையான கற்களாலானது. வியாபாரத்தில் மிருகங்கள் படம் பொறித்த முத்திரைகள் பயன்படுத்தப்பட்டன.
16.மக்களின் முக்கியத் தொழில் – விவசாயம், நெல், பருத்தி பயிரிடப்பட்டது.
17.சிந்து சமவெளி மக்கள் உடை – பருத்தி, கம்பளியால் நெய்யப்பட்ட உடைகள்
18.சிந்து சமவெளி உயர்குடி மக்கள் அணிந்த அணிகலன்கள் – தங்கம்,வெள்ளி, தந்தம்
19.சிந்து சமவெளி ஏழை மக்கள் அணிந்த அணிகலன்கள் –கிளிஞ்சல், தாமிரம், தங்கம், வெள்ளி, தந்தம்
20.சிந்து சமவெளி மக்கள் எதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர். –டெர்ராகோட்டா எனப்படும் சுடுமட்பாண்டம் செய்வதில்.
21.ஹரப்பாவில் சக்கரத்தைப் பயன்படுத்திச் பளபளப்பான வண்ணம் பூசப்பட்ட சட்டி, பானைகள் செய்யப்பட்டன
22.சித்திர எழுத்துகள்-பிக்டோகிராப், வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. அடிப்படை சித்திர எழுத்துகள் எண்ணிக்கை சுமார் 400.
23.சிந்து சமவெளி மக்கள் இறந்தவர்களை புதைக்கும்போது உணவு, அணிகலன்களையிம் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
24. பெரிய குளியல் குளம் மற்றும் பெரிய தானியக் களஞ்சியம் அமைந்த இடம் மொகஞ்சதாரோ
25. சிறு அளவிலான சுமார் 12 தானியக்களஞ்சியங்கள் – ஹரப்பா
26.ஹரப்பா நாகரீகம் – நகர நாகரீகம்
27.சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிய உதவுவது – அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்
28.சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை – சித்திர எழுத்துகளாகும்
29.ஹரப்பா கண்டறியப்பட்ட ஆண்டு – 1921, மொகஞ்சதாரோ கண்டறியப்பட்ட ஆண்டு – 1922
30.ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் – பசுபதி என்ற சிவன், பெண் கடவுள், லிங்கம், சூலம், மரம்
31.சிந்து சமவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம்- இரும்பு
32.சிந்துசமவெளி மக்கள் ஆறிந்திராத விலங்கு – குதிரை
33.சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது? லோத்தல்
34.சிந்துசம்வெளி மக்கள் கடல் கடந்து வாணிபம் செய்த நாடுகள் – சுமேரியா,பாபிலோனியா, எகிப்து
35.ஹராப்பா & மொகஞ்சதாரோ இன்று உள்ள நாடு – பாகிஸ்தான்
36.லோத்தல் – போக்ரா நதிக்கரை by S.R.
RAO - முதல் செயற்கைத் துறைமுகம்
37. சிந்துவின் தோட்டம் என்றழைக்கப்படுவது- மொகஞ்சதாரோ
38. வெண்கல நடனமாது சிலை, சுண்ணாம்புக்கல்லால் ஆன பூசாரி சிலை - மொகஞ்சதாரோ
39.முக்கிய உணவு – கோதுமை, பார்லி
40. ஹரப்பா அமைவிடம் --- பாகிஸ்தான் நாடு
àமே.பஞ்சாப் மாநிலம் àராவி நதிக்கரை
àமாண்ட்கோமரி மாவட்டத்தில் ஹரப்பா அமைந்துள்ளது. (1921- தயாராம் சகானி)
41.மொகஞ்சதாரோ அமைவிடம் --- பாகிஸ்தான் நாடு
àசிந்து மாநிலம் àசிந்து நதிக்கரை
àலார்கானா மாவட்டத்தில் ஹரப்பா அமைந்துள்ளது. (1922- ஆர்.டி.பானர்ஜி)
42. அளவைகளுக்கு 16-ன் மடங்குகள் பயன்படுத்தப்பட்டன
43. ஒற்றைக்கொம்பு எருது முத்திரை பயன்படுத்தப்பட்டது
44. இரும்பு மற்றும் குதிரையின் பயனை அறியாதவர்கள்
45. கட்டிடங்கள் சிட்டாடல் எனப்படும் மாடிக்கட்டிடங்களாக காணப்பட்டன
46. சமூகக்கூடம், பொழுதுபோக்கிற்கு இசை, நடனம்,சதுரங்கம், சேவல் சண்டை, தெருக்கள் நேராக திட்டமிட்டு கட்டப்பட்டிருந்தது, குளியல் குளத்தில் கழிவு நீர் வெளியேற்ற அமைப்பு, படிக்கட்டுகள், உடைமாற்றும் அறைகள், சுட்ட செங்கற்கள் பயன்பாடு உள்ளிட்டவை சிந்து சமவெளி நாகரீகத்தின் சிறப்பம்சங்களாகும்.
47.குஜராத்தில் நெருப்பு பலிபீடமும், கருப்பு வளையல்களும் கண்டறியப்பட்ட இடம்- காளிபங்கன் 48. குஜராத்தில் குதிரை எலும்புகள் காணப்பட்ட இடம்-சுர்கோடடா, தோலவிரா(பெரிய இடம்)
49.பஞ்சாபில் ரூபார், உ.பி.யில் ஆலம்கிர்பூர் ஆகியவை குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சி இடங்கள். இந்த நாகரீகம் இயற்கை சீற்றத்தால் அழிந்திருக்கலாம் என்றும் அன்னியர் படையெடுப்பினால் அழிந்திருக்கலாமென்றும் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
50.தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் இந்திய வரலாறு நூலை எழுதியவர்- வி.ஏ.ஸ்மித்



