சமண மதம்- புத்த மதம்- Imp. Points to remember
சமண மதம்
1.உலகின் சமய சிந்தனைப்புரட்சி காலம். கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
2.மகாஜனபதம் என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு ஆகும். (16 சிற்றரசுகள்)
3.சமண
மதத்தினால் எத்தனை தீர்த்தங்கரர்கள் வழிபடப்படுகின்றனர். 24
4.முதல்
தீர்த்தங்கரர் - ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர்,
23-வது தீர்த்தங்கரர் பாசவ நாதர்
5.வர்த்தமான மகாவீரர் 24 வது தீர்த்தங்கரர்
6.வர்த்தமான மகாவீரரின் காலம். கி.மு. 534 முதல் கி.மு.462
7.மகாவீரர் பிறந்த ஊர். குந்தக் கிராமம், சார்ந்த இனம்- சத்ரிய இனம்
8.மகாவீரர் தந்தை பெயர் சித்தார்த்தர், தாயின் பெயர். திரிசலை
9. மகாவீரர் மனைவி பெயர். யசோதா,
மகள்
பெயர். அனோஜா
பிரியதர்சனா
10.மகாவீரர் தனது 30-வது வயதில் இல்வாழ்க்கையைத் துறந்து துறவியானார்.
11. மகாவீரர் 42 வயதில் ரிஜுபாலிகா நதிக்கரை, சால் மரத்தடியில் கைவல்ய நிலை அடைந்தார். பின்னர் ஜீனர், கைவல்யர் என அழைக்கப்பட்டார். மகாவீரரின் முதல் சீடர் அவரது மருமகன் ஜமாலி.
12. பாசவநாதரின் கொள்கைகள் - நான்கு
(அகிம்சா, சத்தியா,அய்தய,அபரிகிருகா)
13. மகாவீரரின் கொள்கைகள் -ஐந்து
(அகிம்சா, சத்தியா,அய்தய,அபரிகிருகா மற்றும் பிரம்மச்சாரியம்)
14.சமணர்களின் முக்கியத் தொழில். - வணிகம்
15.மகாவீரரின் போதனைகள் - திரிரத்தினங்கள்-
நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை
16. காஜுராஹோ, தில்வாரா கோயில்கள், மௌவுண்ட் அபு, உதயகிரி, எல்லோரா, தமிழகத்தின் கழுகுமலை ஆகிய இடங்கள் சமண சமய கலைகளுக்கு சான்றுகள்.
17.வெற்றியாளர் அல்லது ஜினர் (தன்னை வென்றவர் ) என்று அழைக்கப்பட்டவர். - மகாவீரர்
18.சமண
சமயம்
உயிரிரக்கம் எனப்படும் அகிம்சையை மிகவும் வலியுறுத்தியது.
19.சமண
சமயம்
மிகவும் வலியுறுத்திய கொள்கை. - கொல்லாமை
20.சமணர்களின் புனித நூல்கள் -
ஆகமசித்தானந்தங்கள் மற்றும் 12 அங்கங்கள், 14 பூர்வங்கள் என்பனவாகும்.
மக்களின் மொழி பிராகிருதம், உபதேச மொழி அர்த்தமகாதி
21.கோமதீஸ்வரர் சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சரவணபெலகொலா என்னும் இடத்தில் உள்ளது.
22.சமண
சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் - சந்திர குப்த மெளரியர், கலிங்கத்துக்காரவேலன், கூன்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் போன்றவர்கள் ஆவர்.
23.சமண
முனிவர்கள் இயற்றியவை. - சிலப்பதிகாரம் நன்னூல் (இலக்கணம்) சீவகசிந்தாமணி வளையாபதி(இலக்கியம்)
24. மகாவீரர் 72 –வது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் மரணமடைந்தார்.
25. சமணர்களின் கொள்கை- கடவுள் இல்லை, கர்மா உண்டு, உலகம் தானே இயங்குகிறது. அனைத்து பொருள்களுக்கும் உயிர் உண்டு.
26.அங்காக்கள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் கணதாரர்கள் எனப்பட்டனர்.
27.சமணமத பிரிவுகள் திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்
28. திகம்பரர் (வானத்தை ஆடையாய் அணிந்தவர்கள்)
இப்பிரிவின் தலைவர் பத்ரபாகு
ஸ்வேதாம்பரர் (வெள்ளை ஆடை அணிந்தவர்கள்)
இப்பிரிவின் தலைவர் ஸ்தூலபத்தர்
29. இரு சமணமத மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்-பாடலிபுத்திரம், வல்லபி
30. சமணசமய கோவில்களை அழித்தவர்- அலாவுதீன் கில்ஜி.
31. சமண சமயம் பரவிய காலத்தில் தோன்றிய மற்றொரு மதம் அஜிவிகா மதம் by கோசலர்
32. அசோகரால் பராபர் குகைகள் அஜிவிகா மதத்திற்கு ஒதுக்கப்பட்டன.
33. சந்திரகுப்த மௌரியரை சமணசமயத்திற்கு மாற்றியவர் பத்ரபாகு
34.மகாவீரரின் குறியீடு சிங்கம்.
(ரிஷப தேவர்-எருது, பாசவ நாதர்-நாகம்)
35. அனுவர்தா இயக்கம் துவக்கப்பட்ட ஆண்டு 1949 துவக்கியவர் ஆச்சார்யா துளசி.
புத்த மதம்
36. புத்தமதத்தை தோற்றுவித்தவர் - சித்தார்த்தர் என்னும் கெளதமபுத்தர்
37.கெளதமபுத்தர் வாழ்ந்த காலம் கி.மு 563 முதல் கி.மு. 483 வரை
38.கெளதமபுத்தர் பிறந்த ஊர். நேபாள நாட்டிலுள்ள கபிலவஸ்து. இறப்பு-குசி நகர்.
39.கெளதமபுத்தர் பெற்றோர் - சுத்தோதனர், மாயாதேவி
40.கெளதமபுத்தர் மனைவி பெயர். யசோதரை
41. 29-வயதில் துறவு மேற்கொண்ட புத்தர் தம் 39-வது வயதில் ஞானம் பெற்ற இடம்- நிரஞ்சனா நதிக்கரையில் உருவேலா கையை என்னுமிடத்தில் ஒரு போதிமரத்தடியில்.
42.பெளத்த
சமயக்கொள்கைகளைக் கூறும் மறை நூலுக்கு திரிபிடகம் என்று பெயர்.
மூன்று பீடகங்கள் சுத்த பீடகம், வினய பீடகம், அபிதம்ம பீடகம்
43.ஆனந்தா, சாரிபுத்தர் ஆகியோரால் திரிபீடகங்கள் தொகுக்கப்பட்டன
44.புத்தர் தனது முதல் போதனையை சாரநாத்தில் உள்ள மான்பூங்காவில் தொடங்கினார்.
45. அவரது முதல் உபதேசம் “தர்மசக்ர பிரவத்தனே” எனப்படுகிறது.
46. புத்தரின் முதல் குரு- ஆராதலகாமா
47. புத்த மத நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தன. பாதிமோக்கம் என்பது புத்தரின் வாழ்க்கை பற்றிய நூல்.
48. சுத்தபீடகம் (பெரியது) தூய்மைப்பற்றியும், விநய பீடகம் புத்தமத விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சங்கங்கள் குறித்தும் விளக்குகிறது
49.அபிதம்ம பீடகம்- புத்தசமய இலக்கியங்கள் மற்றும் புத்தரின் வாழ்க்கை வரலாறை விளக்கும் ஜாதகக்கதைகள் கொண்ட தொகுப்பு
50. தீகநாயகம் என்பது 34 சூத்திரங்கள் உடைய புத்தமத இலக்கியம்
51. மகாபரினயா என்பது புத்தர் வாழ்வின் கடைசிக்காலம் குறித்து விளக்குகிறது.
52.பெளத்தத் துறவிகளின் விகாரங்கள்(மடங்கள்) மிகுந்த மாநிலம். - பீகார்
53.புத்தர் சாக்கியமுனி, ஆசிய ஒளிவிளக்கு ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார்
54. புத்தரின் சீடர்கள் உபாலி, ஆனந்தா, சாரிபுத்தர், மகாகாஸ்யப்பர்
55.துன்பங்களை பற்றி புத்தர் கூறியது 4 பேருண்மைகள் ஆகும்.(நிக்கா,நிரோலா,மார்க்கா,சமுதாய)
56.ஒழுக்க
நெறிகளை பற்றி புத்தர் கூறியது - எண்வகை நெறிகள்
57. கனிஷ்கர் காலத்தில் புத்த மதம் இரண்டாக பிரிந்தது-
1. ஹீனயானம் , 2. மஹாயானம்
58.ஹீனயானம் புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள்.- மொழி பாலி - அசோகர்
59.மஹாயானம் புத்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்- மொழி சமஸ்கிருதம் -கனிஷ்கர்
60.பெளத்த
துறவிகளின் அமைப்பு சங்கம் என அழைக்கப்பட்டது.
61.பெளத்த
துறவிகளின் மடங்கள் மிகுந்த மாநிலம் பீகார்
62.வட்டக்காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்தான் திரிபிடகம் முதன் முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது.
63.மகாவம்சம் என்பதை பாலி மொழியில் திரிபிடகம் என்பர். திரிபீடகம் என்பதற்கு மூன்று கூடை என்று பொருள்.
64.புத்தமத மாநாடுகள் - நான்கு
நடைபெற்ற இடங்கள் (RVPK)—ராஜகிரகம், வைசாலி, பாடலிபுத்திரம், காஷ்மீர்
65.பெளத்த
சமய
வரலாற்றை ஜாதகக் கதைகள் பெரிதும் விவரிக்கின்றன.
66.பெளத்த
நூல்கள். மணிமேகலையும், குண்டலகேசியும்
67.பெளத்த
சமயத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்கள் - அசோகர், பிம்பிசாரர்,அஜதசத்ரு
68. புத்தமத பல்கலைக்கழகங்கள்- (காலவரிசைப்படி) ---
1.தட்சசீலம், 2.நாகர்ஜுனா, 3.நாளாந்தா, 4.வாதாபி, 5,விக்ரமசீலா
69. புத்தமத முக்கிய நூல்கள்- மிலிந்தபண்கோ, சூத்ர அலங்காரம், மகாவம்சம், தீபவம்சம்
70. ஹர்ஷர் காலத்தில் கன்னோசி, அலகாபாத் ஆகிய இடங்களில் புத்தமத பிரயாகை நடந்தது.
71. மகாயான பள்ளிகள்-மத்தியமிகா, யோகசாரா,
ஹீனயான பள்ளிகள்- வைபாஷிகா
72. புத்தரின் வாழ்க்கை நிலைகளை விளக்கும் குறியீடுகள்:- பிறப்பு-தாமரை, துறவு-குதிரை,மெய்யறிவு-போதிமரம், சொற்பொழிவு-தர்மசக்கரம்,இறப்பு- ஸ்தூபம்
73. BUDDIST INDIA என்னும் நூலை எழுதியவர் ரைஸ் டேவிஸ்
74. புத்தமத துறவு மடங்கள் தவாங் என்றழைக்கப்படும்.
75.தேசியக் கொடியில் காணப்படும் 24 ஆரங்கள் கொண்ட சக்கரம், அசோகரின் தூண்களில் உள்ள தர்மசக்கரம் ஆகும்.

