குடியரசுத் தலைவர் --- நாட்டின் முதல் குடிமகன் குறித்த தகவல்கள்..

 

குடியரசுத் தலைவர்

நாட்டின் முதல் குடிமகன் குறித்த தகவல்கள்..


பரந்துபட்ட அதிகாரங்களை பெற்றுள்ள குடியரசுத்தலைவர்பற்றி அரசியலமைப்பில் கூறப்பட்டு நம் போட்டித்தேர்வுகளில் எதிர்ப்பார்க்கப்படும் தகவல்கள் என்ற அடிப்படையில் மட்டுமல்லாது, ஒரு இந்திய குடிமகனாக நம் ஜனாதிபதி பதவி குறித்து அறிவோம்..

 

இந்திய அரசியலமைப்பு சட்டம் நம் நாட்டின் முதல் குடிமகனாகவும், நம இந்திய் அரசின் தலைவராகவும் இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் குறித்து விரிவாக விளக்கியுள்ளது. அவைகளின் முதல் பகுதியாக கீழுள்ளவற்றை காண்போம்..


1.இந்தியக் குடியரசுத்தலைவராக ஒருவர் இருப்பார் என்று விதி 52 கூறுகின்றது


2.விதி 53, நிர்வாக அதிகாரங்கள் குடியரசுத்தலைவரிடம் இருக்கும் என்கின்றது


3.குடியரசுத்தலைவரே இந்திய நாட்டின் தலைவர் ஆனார்


4.அவர் பெயரளவுக்கு மட்டுமே நாட்டின் தலைவராக விளங்குகிறார்


5.குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான உடன்பாடுகள் விதிகள் 54 மற்றும் 55,


6.மத்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்,  மாநில சட்டசபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்  அடங்கிய தேர்தல் குழுவினால் இந்திய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்


7.பாராளுமன்றத்தின் இரு அவைகள் மாநிலத்தின் கீழ்சபை சட்டப்பேரவைக்கும் மேல்சபை சட்டமேலவைக்கும் (இரு சபைகள் கொண்ட சட்டமன்றங்களில்) நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்  குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்க மாட்டார்கள்.


8.குடியரசுத்தலைவர் தேர்தல் ரகசிய, ஒற்றை மாற்று ஒட்டெடுப்பின், மூலம் சமச்சீரான  பங்களிப்பு முறையின்படி நடைபெறும். 

 தேர்தலில் வாக்கு மதிப்பு கணக்கீடு செய்யப்படும் முறை..

11.குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலாக செல்லத்தக்க ஓட்டுக்களை பெறவேண்டும்


12.குடியரசுத்தலைவர் தேர்தல் மறைமுகமானதான ஒன்றாகும்


13.குடியரசுத்தலைவர் தேர்தலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே  தலையிட அதிகாரம் உண்டு


14.இப்பிரச்சினையை தேர்தல் முடிவடைந்த பின்னரே உச்சநீதி மன்றத்தின் முன் கொண்டு வரமுடியும்


15.தேர்தல் குழுவில் இருக்கும் காலியிடங்களைப் பற்றி எந்த மனுவும் பதிவு செய்ய முடியாது


16.குடியரசுத்தலைவராக தேர்ந்ததெடுக்கப்படும் நபர் இந்திய குடிமகனாக, புத்தி சுவாதீனம் குறைவில்லாதவராக, வங்கிகளால் திவாலானவர் என அறிவிக்கப் படாதவராக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படை தகுதிகளோடு பின்வரும்  விதிகளையும் அரசியலமைப்பு விதிக்கின்றது.

*பாராளுமன்ற உறுப்பினராகவோ மாநில  சட்டமன்;ற உறுப்பினராகவோ இருக்கக் கூடாது. அரசாங்க ஊதியம் பெறும் வேலைப்பார்க்கக் கூடாது

*அவரது ஊதியம் மற்றும் சலுகைகள் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும்

*அவரது ஊதியம் மற்றும் படிகள் அவரது பதவிக்காலத்தில் குறைக்கப்படக்கூடாது


17. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினராக இருப்பவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும்


18.குடியரசுத் தலைவர் தனது அலுவலக வசிப்பிடத்தில் இலவசமாக தங்க உரிமை உண்டு


19.இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பார்


20. குடியரசுத் தலைவர் 5 வருட காலம் பதவி நீடிப்பார்


21. அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை துணைக் குடியரசு தலைவரிடம்  அளிப்பதன் மூலம் தனது பதவியை எப்பொழுது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்


22.துணைக் குடியரசுத்தலைவரிடம் அளிக்கப்படும் எந்த ராஜினாமா பற்றிய விவரமும், மக்களவை சபாநாயகருக்கு தெரிவிக்கப்படவேண்டும்


23. அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத்தலைவர் அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியிலிருந்து விலக்கப்படலாம் 


24.இரு பாராளுமன்ற சபைகளின் எந்த சபையில் வேண்டுமானாலும் இக்குற்றச்சாட்டை தொடங்கலாம்


25.பாராளுமன்றத்தின் நான்கின் ஒரு பங்கிற்கு குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு 14 நாட்களுக்கு முன்னதாக குடியரசுத்தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை தீர்மான வடிவமாக சமர்ப்பிக்க வேண்டும்


26.குற்றச்சாட்டுக்களை தொடங்கும் சபையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அவற்றை ஏற்றுக் கொண்டால் மறு சபையில் அக்குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படும்


27.குற்றச்சாட்டுகள் ஆராயப்படும் பொழுது குடியரசுத் தலைவர் சபையில் இருக்க உரிமை உண்டு


28.அந்த சபையும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையால் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டால் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்


29.குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் ஓரளவு சட்டநடைமுறையைக் கொண்டதாகும். 


30.குடியரசுத்தலைவர் பதவியில் இருக்கும் போது இறந்து விட்டாலோ அல்லது ராஜினாமா செய்து விட்டாலோ அல்லது குற்ற விசாரணை செய்து விலக்கப்பட்டு விட்டாலோ அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ தலைவர் பதவி வெற்றிடமானால் துணைக்குடியரசுத்தலைவர் குடியரசுத் தலைவராக செயல்படுவார்


31. துணைக்குடியரசு தலைவர் குடியரசுத் தலைவராக செயல்படும் போது அவருக்கு குடியரசுத் தலைவருக்குண்டான எல்லா அதிகாரங்களும், ஊதியமும், செலவுப்படிகளும், சிறப்பு சலுகைகளும் உண்டு


32.சாதாரண சூழ்நிலைகளில் குடியரசுத்தலைவர் பதவி வெற்றிடமானால் அப்பதவியின் காலம் முடிவதற்குள் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்


33.குடியரசுத்தலைவரின் இறப்பு, ராஜினாமா, பதவி நீக்கம் மற்றும் வேறெந்த காரணங்களாலும் பதவி வெற்றிடமானால் 6 மாத காலத்திற்குள் புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


 --அடுத்தடுத்த பாகங்களில் குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் குறித்து காண்போம்…


 💥💥💥💥💥சமச்சீர் கல்வி இந்திய அரசியலமைப்பு (POLITY & CIVICS) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்...💥💥💥💥💥


 


Post a Comment

Previous Post Next Post