ரத்த சுழற்சி மண்டலம்

  


ரத்த சுழற்சி மண்டலம்

ரத்தம் உடலில் சுற்றி சுற்றி வருவதே ரத்த சுழற்சி.. அடடா எவ்வளவு எளிமையா சொல்லிட்டோம்… சும்மா சுத்தி வர்றதுக்கு ரத்தம் ஒண்ணும் வெட்டி ஆபிசரு இல்லையே…

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் செல்களை அடைவதற்கும், கார்பன் டை ஆக்சைடு செல்களிலிருந்து வெளியேறுவதற்கும், உணவு பொருட்கள் செல்களை அடைந்து கழிவுப்பொருட்கள் வெளியேறுவதற்கும், ஹார்மோன்கள் நாளமில்லா சுரப்பிகளில் இருந்து வெளியேறி செல்வதற்கும் ஒரு காரணகர்த்தாவாக அப்பணிகளை செய்வதற்காக உடலுக்குள் அமைந்துள்ள உயிரோட்ட அமைப்பே ரத்த சுழற்சி ஆகும்.

ரத்தம்கூட நாம சும்மா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தா தலை சுத்திடும்.. ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அளவில் இருக்குமாம்.. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்,இது ஒரு மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் சுவாசிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

இந்த வேலைகளை செய்ய மூணு பேர் இருக்காங்க…அவங்க 24/7 ரவுண்டு கட்டி வேலை செய்யற அவங்கதான் ரத்த சுழற்சி மண்டலத்தின் ஆணிவேர்கள்..

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டுவரும் சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகிய ரத்தக் குழாய்களைக் கொண்ட மூடிய மண்டலம் இரத்த சுழற்சி மண்டலம் ஆகும்.

வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் 1628 ஆம் ஆண்டு முதன் முதலாக இதயத்தின் வேலையையும் ரத்த சுழற்சியையும் கண்டறிந்தார்.

ரத்தச்சுழற்சியில் பங்கு பெறுபவைகள் எவையென பார்த்தால்…,  இதயம்(Heart), தமனிகள்(Artery), சிரைகள்(Veins) மற்றும் தந்துகிகள்(Capillary) ஆகும்.

இதயம் - ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக சுருங்கி விரிகிறது.

தமனிகள்(Artery), சிரைகள்(Veins) மற்றும் தந்துகிகள்(Capillary) - போன்றவை ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்வது மற்றும் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து வருவது போன்ற பணிகளை செய்கின்றன.

ரத்தம், நிணநீர் போன்றவைகளும் ரத்த சுழற்சி மண்டலத்தின் முக்கிய கூறுகளாகும்.

ரத்தக் குழாய்கள்

தமனிகள்(Artery), சிரைகள்(Veins) மற்றும் தந்துகிகள்(Capillary) என மூன்று வகை ரத்தக் குழாய்கள் உள்ளன.

தமனிகள்(Artery)-- தசையால் ஆன மற்றும் மீள்விசை தன்மையுடைய தடித்த சுவர்களை கொண்டவைகளாகும்.

தமனி இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச்  செல்லும்.

விதிவிலக்காக நுரையீரல் தமனி மட்டும் சுத்திகரிக்கப்படாத ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதற்காக இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும்.

தமனிகள் பிரிந்து மெல்லிய நுண்தமனிகளாக இருக்கும்போது ஆர்ட்டிரியோல்கள் எனப்படும்.

அவை மேலும்  பிரிந்து மெல்லிய சிறிய மெட்டா ஆட்ரியோல்களாகவும்(Arteriole) கேப்பிலரிகளாகவும் (Capillary) இருக்கும்..

தமனிகளில் ரத்த அழுத்தம் உயர்வாக இருக்கும்..

சிரைகள்(Veins)

மெல்லிய சுவரால் ஆன மற்றும் குறைந்த மீள்தன்மை கொண்ட இரத்த குழாய்கள் ஆகும்.

சிரைகள் திசுக்களில் இருந்து இரத்தத்தை சேகரித்து இதயத்தினுள் சேர்க்கும் வேலையை செய்கிறது.

நுரையீரல் சிரைகள் மட்டும் நுரையீரலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும்.

சிரை மண்டலத்தின் நுண்குழல்கள் நுண் சிரைகள் வெண்யூல்கள் எனப்படும்.

சிரைகளில் ரத்த அழுத்தம் குறைவாகவும், சீராகவும் காணப்படும்.

தந்துகிகள்(Capillaries)

ரத்த ஓட்ட மண்டலத்தில் செயல் அடிப்படையில் தந்துகிகள் மிகவும் முக்கியமான பகுதியாகும். மெல்லிய நரம்பு முனைகளைக் கொண்டவை. ஆர்ட்டிரியோல்களின் பிரிவினால் தந்துகிகள் உருவாகின்றன. தந்துகிகள் மீண்டும் இணைந்து வென்யூல்களாகவும் மற்றும் வென்யூல்கள் இணைந்து சிரைகளாகவும் மாறுகின்றன.

அடுத்த பாகத்தில் ரத்த சுழற்சி மண்டலத்தின் முக்கிய பாகமான இதயத்தை படிப்போம்..

Post a Comment

Previous Post Next Post