இந்தியாவின் புகழ்பெற்ற நடனங்கள்


இந்திய நடனங்கள்

இந்திய நடனங்கள் குறித்த வினாக்கள் பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. கீழ்காணும் நடன ங்கள் சார்ந்தே பல வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. 


பரதநாட்டியம்


தென்னிந்திய கோவில்களில் இருந்து துவங்கியது. தனி நபர் நடனமான பரத நாட்டியம், கி.மு.4000-ல் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டது. மிகவும் பாரம்பரியமான நடனமான பரதம் அலரிப்பூ, வர்ணம்,பதம், தில்லானா ஆகியவற்றை உள்ளடக்கியது. 


ஒடிஸி

நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் ஆரம்பிக்கப்பட்ட நடனம். 

கோவில்களில் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரிய நடனமான ஒடிசி 17-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கோட்டிப்புகழ் எனப்படும் சிறார்கள் ஒடிசி நடனத்தை பெண் வேடமிட்டு கோவில்களில் ஆடியதாக கூறப்படுகிறது.


சாக்கியர் கூத்து


கேரளாவில் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடனம் எனப்படும் சாக்கியர் கூத்து மிகவும் பழமையான ஒன்றாகும். சாக்கியர் எனப்படும் சாதியினர் சார்பில் கோவில்களில் நடத்தப்படும் இந்த நடனம். கோவில் வளாகங்களில் ஆடப்படும் இது பொதுவெளியில் ஆடப்படுவதில்லை. 


மணிப்புரி


பாடல்களை பிரதானமாக கொண்ட மணிப்புரி நடனம் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மிகவும் பிரபலமான நடனமாகும். சடங்குகளை சார்ந்த நடனம்  மணிப்புரி. அழுத்தமான முக பாவங்கள் மற்றும் சைகைகள் குறைவாக இருக்கும். ராஸலீலா எனப்படும் கிருஷ்ணராதா கோபிகையர்களால் ஆடப்படும் மகிழ்ச்சி நடனமும் இவ்வகை சார்ந்தது


குச்சிப்புடி


ஆந்திரப்பிரதேசத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் தனி நபர் நடனமே குச்சிப்புடி ஆகும். இதுவும் நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட நடனம்தான். பாராம்பரியாக பெண்கள்போல வேடமணிந்த ஆண்களால் இக்குச்சிப்புடி நடனம் ஆடப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் பெண்களே இந்த நடனத்தை ஆடுகின்றனர். குச்சிபுடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.


கதக்

ராதை மற்றும் கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி விளக்கும்வகையில் கோவில்களில் ஆடப்பட்ட இந்த நடனவகை இஸ்லாமியர்களில் காலத்தில் கோவில்களில் இருந்து நகர்ந்து மன்னர்களின் அரசவைகளில் இடம்பெற ஆரம்பித்தது. வட இந்தியாவின் மிகவும் பிரபலமான நடனம். லக்னோ ,ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் முக்கிய நடனமாக திகழ்ந்தது.


கதகளி


நாடகவடிவிலான நடனம். கேரளாவில் மிகவும் பிரபலமான நடனம். உடல் அசைவுகள், கை அசைவுகள், கண் அசைவுகள் இவைகளை மொழியாக பயன்படுத்தி ஆடப்படும் கதகளி மிகவும் அறிவியல்பூர்வமான நடன வடிவமாக கருதப்படுகிறது. இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை எடுத்தாண்டு ஆடப்படும் கதகளிக்கு ஆட்டக்கதை என்ற பெயரும் உண்டு.


மோகினியாட்டம்


கேரளாவில் ஆடப்படும் தனி நபர் நடனம். பரதம், ஒடிசி, குச்சுப்புடி போல இதுவும் ஒரு குறிப்பிட்ட பரம்பரையினரால் கோவில்களில் ஆடப்பட்டு வந்த நடனம். 


ஒட்டன் துள்ளல்


ஏழையின் கதகளி எனப்படும் ஒட்டன் துள்ளல் கேரளாவில் ஆடப்படும் பிரபலமான தனி நபர் நடனம் ஆகும். நாட்டுப்புற கலைகளில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.


- மேற்கூறிய இவ்வகை நடனங்கள் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில்  குறிப்பாக அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்டவைகளில் நடைபெறும் அறுவடை திருவிழாக்கள் குறித்தும் அறிந்து வைத்திருத்தல் போட்டித்தேர்வுகளுக்கு அவசியமானதாகும். 

Post a Comment

Previous Post Next Post