அடிப்படை கடமைகள் Fundamental Duties - பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் இப்பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.. குறிப்பிட்ட சில வினாக்களே மீண்டும் மீண்டும் கேட்கப்படும்.
அவைகளில் சில..
அடிப்படை கடமைகளை பரிந்துரை செய்த கமிட்டி எது ?
எத்தனை கடமைகளை ஸ்வரன் சிங் கமிட்டி பரிந்துரை செய்தது?
அடிப்படை கடமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறப்பம்சம் ?
அடிப்படை கடமைகள் எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டன?
எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன?
அடிப்படை கடமைகள் அமைந்துள்ள பாகம் என்ன?
அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவில் (ஆர்ட்டிக்கல்) அடிப்படை கடமைகள் இடம்பெற்றுள்ளன?
தற்போது எத்தனை அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன?
கடைசியாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமை எது?.. அது எந்த சட்டத்திருத்தம் மூலமாக..
11-வது அடிப்படை கடமை எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது?
11-வது கடமையை இணைத்ததன்மூலமாக எந்தெந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
அடிப்படை கடமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
--- இக்கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் நமது அடிப்படை கடமைகள் குறித்த முந்தைய பதிவை மீண்டும் படிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள்..
ஆர்ட்டிக்கல் குறித்து நேரடி வினாக்கள் வரும்போது சமாளிக்க அதன் ஷரத்துகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள பின்வரும் Shortcut மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51-A(a)-வில் தொடங்கி 51A(k) வரை என 11 ஷரத்துகள் (Articles) இப்பிரிவில் அடங்கியுள்ளன..
a- anthem
b- brave
c- centre-unity-co.operation
d- defence-demand
e-equality
f-feminism-culture
g-green environment-garunya
h-humanities
i- individual responsible
j-jointly
k- knowledge- education
Revision செய்வதற்காக பின்வரும் ஆர்ட்டிக்கல்களை ஒருமுறை படிக்கலாம்...
1. ஷரத்து 51 A (a) - ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்பிற்கு கீழ்ப்படிந்து அரசியலமைப்பு நிறுவனங்கள் அரசியல் அமைப்பின் நோக்கம் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற சின்னங்களை மதிக்க வேண்டும். (a for arasiyalamaippu/ a for Anthem, abide flag)
2.ஷரத்து 51 A (b) - விடுதலைப் போராட்டத்தின் போது வீர தீரமாக செயல்பட்ட தியாகிகளின் லட்சியங்களை நினைவிற்கொண்டு அவற்றை போற்றி பின்பற்ற வேண்டும். (b for brave)
3.ஷரத்து 51 A (c)- இந்தியாவின் இறைம ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும். (c for centre - co.operation, Unity)
4.ஷரத்து 51 A (d)- தேவைப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். (d for Defence, Demand)
5.ஷரத்து 51 A (e)- சமய மொழி வட்டார வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கம் ஏற்பட பாடுபட வேண்டும்
(e for Equality)
6.ஷரத்து 51 A (f)- கூட்டுக் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வண்டும் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும் (f for French (culture), female)
7.ஷரத்து 51 A (g)- காடுகள் ஏரிகள் ஆறுகள் விலங்கினங்கள் ஆகியவை அடங்கிய புறச் சூழலை பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்களின் மீது கருணை காட்ட வேண்டும். (g for Green Environment, Garunya)
8.ஷரத்து 51 A (h)- அறிவியல் உணர்வு மனிதநேயம் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும். (h for Humanity and Hi tech)
9.ஷரத்து 51 A (i)- வன்முறையை வெறுத்து ஒதுக்கி பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். (I for Individuality.. Self discipline)
10.ஷரத்து 51 A (j)- தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயற்சி செய்வதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சி செய்ய வேண்டும். (j for Jointly..)
11.ஷரத்து 51 A (k)- 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புதல் வேண்டும். (k for Knowledge, education/ kalvi)
- இனி இப்பாகம் குறித்து அசல் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள பழைய வினாக்களை படித்துவிட்டால் இதுகுறித்து போட்டித்தேர்வர்கள் இனி கவலைப்பட வேண்டாம்..
- இப்படி அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் எளிதாக படித்து நிரந்தரமாக நினைவில் நிறுத்தி போட்டித்தேர்வை எப்படி எளிதாக அணுகுவது என அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்..
Tags:
Cheat sheets
